5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Anant Radhika Wedding: ரஜினி முதல் ஜான் சீனா வரை.. அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

கேஷ் அம்பானியின் மகன் – நீடா அம்பானியின் 2வது மகன் ஆனந்த அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இன்று இரவு மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி அம்பானியின் இல்லமான ஆண்டிலியாவில் திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 13 Jul 2024 00:16 AM
முகேஷ் அம்பானியின் மகன் – நீடா அம்பானியின் 2வது மகன் ஆனந்த அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இன்று இரவு  மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  இதையொட்டி அம்பானியின் இல்லமான ஆண்டிலியாவில் திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.

1 / 7
இதில் கலந்து கொள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் வீட்டுக் கல்யாணம் என்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.  இதனால் சினிமா பிரபலங்கள் தொடங்கி கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2 / 7
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு விருந்தினர்களை அழைப்பதற்காக அம்பானி குடும்பம் 2000 ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ளது. கிளப் ஒன் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜன் மெஹ்ரா, இந்த நிகழ்விற்கு 100க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். பிரபல பாப் பாடகர்கள் ரிஹன்னா, ஜஸ்டின் பீபர் உள்ளிட்டோர் இவர்களின் திருமண நிகழ்விற்கு சிறப்பு விருந்தினரகளாக கலந்து கொண்டனர்.

3 / 7
உலகக் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரரும், நடிகருமான ஜான் சீனா, கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் கார்ல பில்ட், மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், பிரட்டன் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேர், முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உலக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

4 / 7
மேலும், ஷாருக்கான், சல்மான் கான், மகேஷ் பாபு, ரம்பீர் கபூர், ஆலியா பட், அனில் கபூர்,  அனுபம் கேர்,  ரன்வீர் சிங், தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப், கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, ஷாகித் கபூர், மீரா ராஜ்புத், பிரிங்கா சோப்ரா, நிக் சோனாஸ் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

5 / 7
கோலிவுட்டில்  நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, இளைய மகள் சௌந்தர்யா, அவரது கணவர் மற்றும் அவரது மகன் உள்பட குடும்பத்துடன் பங்கேற்றுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அவரது மனைவி  சாய்ரா பானு, இயக்குநர் அட்லீ, அவரது மனைவி பிரியா உள்ளிட்ட தமிழ் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

6 / 7
மேலும், சூர்யா, ஜோதிகா, நயன்தாரா, விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகினர் ஆடம்பரமான ஆடைகளை அணிந்து அம்பானி வீட்டு திருமணத்தில் நடனம் ஆடினர். இந்த சம்பந்தமான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

7 / 7
Latest Stories