இதன் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது. அதன்படி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வரும் 16ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதேபோல வரும் 17ஆம் தேதி நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.