APJ Abdul Kalam Quotes: ”நீ தூக்கத்தில் காண்பது அல்ல கனவு”- டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமின் சில பொன்மொழிகள்! - Tamil News | APJ Abdul Kalam Birthday: Dr APJ Abdul Kalam Motivational Quotes in tamil | TV9 Tamil

APJ Abdul Kalam Quotes: ”நீ தூக்கத்தில் காண்பது அல்ல கனவு”- டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமின் சில பொன்மொழிகள்!

Published: 

15 Oct 2024 20:21 PM

APJ Abdul Kalam Birthday: கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் உலக மாணவர் தினமாக கொண்டாடுவதாக அறிவித்தது. அந்தவகையில், ஏபிஜே அப்துல் கலாமின் புகழை போற்றும்விதமாக, அவர் கூறிய சில தத்துவங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

1 / 6இந்தியாவின்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியுமான, ஏவுகணை வீரர் என்று அழைக்கப்படும் டாக்டர் ஏபிஜே அப்துல் காலமின் பிறந்தநாள் அக்டோபர் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பாரத ரத்னா அப்துல் கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15ம் தேதி உலக மாணவர் தினம் கொண்டாடப்படுகிறது.

2 / 6

கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் உலக மாணவர் தினமாக கொண்டாடுவதாக அறிவித்தது. அந்தவகையில், ஏபிஜே அப்துல் கலாமின் புகழை போற்றும்விதமாக, அவர் கூறிய சில தத்துவங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

3 / 6

1.ஒருமுறை வந்தால் அது கனவு, இரு முறை வந்தால் அது ஆசை, பல முறை வந்தால் அதுதான் இலட்சியம். 2.கனவு காணுங்கள்! தூங்கும்போது வருவது கனவு அல்ல, உங்களை தூங்கவிடாமல் எது செய்கிறதோ அதுதான் கனவு.

4 / 6

3.சிறிய இலக்கு ஒரு குற்றம், இலக்கை பெரிதாக வைத்திருங்கள். 4.வாய்ப்புக்காக காத்திருக்காதே.. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்தி கொள். 5. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவது இல்லை.

5 / 6

6. நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு. 7. ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் இல்லை; உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும்தான்.

6 / 6

8. ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகிறான். ஒரு புத்திசாலிதான் புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும்போது முட்டாளாகிறான். 9. நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?
ஆப்பிள் ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கும் அமேசான்!
பெருஞ்சீரகம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?