பேரிச்சம்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பலர் பேரீச்சம்பழம் சாப்பிட மிகவும் விரும்புவார்கள். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது. பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், வைட்டமின்கள் ஏ, கே மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பேரீச்சம்பழத்தில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.