Clove Benefits: கிராம்பை வாயில் வைத்து தூங்கினால் இவ்வளவு நன்மைகளா..? பல் சொத்தை ஓடும்..! - Tamil News | Are there so many benefits if you sleep with cloves in your mouth; Health tips in tamil | TV9 Tamil

Clove Benefits: கிராம்பை வாயில் வைத்து தூங்கினால் இவ்வளவு நன்மைகளா..? பல் சொத்தை ஓடும்..!

Published: 

14 Nov 2024 20:44 PM

Health Benefits: படுக்கைக்குச் செல்வதற்கு முன் கிராம்புகளை பற்களுக்கு இடையே வைத்து தூங்குவது பல் சொத்தை குறைக்க உதவும். மேலும், வாயில் கிராம்புகளை வைத்து தூங்கும்போது, அதில் இருக்கும். அழற்சி எதிர்ப்பு பண்புகளால் உடலுக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகளை அளிக்கிறது.

1 / 6கிராம்பு

கிராம்பு ஒன்று மட்டுமல்ல பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். அந்தவகையில், கிராம்புகளை வாயில் வைத்து தூங்குவது பல் வலியிலிருந்து நிவாரணம் தரும். கிராம்பில் உள்ள யூஜெனோல் பல் வலியை குறைக்க உதவி செய்யும். மேலும், இது ஈறு வலி மற்றும் ஈறு அழற்ஜியில் பிரச்சனையையும் தீர்க்கும்.

2 / 6

படுக்கைக்குச் செல்வதற்கு முன் கிராம்புகளை பற்களுக்கு இடையே வைத்து தூங்குவது பல் சொத்தை குறைக்க உதவும். மேலும், வாயில் கிராம்புகளை வைத்து தூங்கும்போது, அதில் இருக்கும். அழற்சி எதிர்ப்பு பண்புகளால் உடலுக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகளை அளிக்கிறது.

3 / 6

கிராம்புகளின் பண்புகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை குறைக்கும். இரவு முழுவதும் கிராம்புகளை வாயில் வைத்து தூங்கினால் வாய் துர்நாற்றம் குறையும். மேலும், இது வாயுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

4 / 6

கிராம்பு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. கிராம்புகளை வாயில் வைத்திருப்பது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும், இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களையும் வெளியேற்றுகிறது.

5 / 6

கிராம்புகளை வாயில் வைத்திருக்கும்போது, ​​​​அதன் சாறு வயிற்றுக்குள் நுழையத் தொடங்கும். இது செரிமானத்தை மேம்படுத்த உதவி செய்யும். கிராம்பு செரிமானத்தை மேம்படுத்துவதோடு, வாயுத் தொல்லையையும் நீக்க உதவி செய்யும்.

6 / 6

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கிராம்புகளையும் உட்கொள்ளலாம். கிராம்புகளின் பண்புகள் தளர்வு மற்றும் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்து, நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.

ABC ஜூஸில் இவ்வளவு பிரச்னைகள் உள்ளதா?
பாதாம் பருப்பை எவ்வாறு உட்கொள்வது சரியானது?
தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ