5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Argentina Team: விரைவில் கேரளாவில் விளையாட வரும் அர்ஜென்டினா.. களமிறங்குவாரா மெஸ்ஸி..?

Lionel Messi: கேரளாவில் விளையாடும் அர்ஜென்டினா அணியில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி விளையாடுவாரா என்பது தெளிவாக தெரியவில்லை. இதை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் முடிவு செய்யும்.

mukesh-kannan
Mukesh Kannan | Published: 19 Nov 2024 23:01 PM
கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உலகில் சிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றான அர்ஜென்டினா, அடுத்த ஆண்டு அதாவது 2025-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஸ்பான்சர்ஷிப் மூலம் அணிக்கான நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 / 6
அர்ஜென்டினா அணி கேரளாவில் இரண்டு முக்கியமான போட்டிகளில் விளையாட இருப்பதாகவும், இந்த போட்டிகள் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி ஸ்டேடியங்களில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

2 / 6
கேரளாவில் விளையாடும் அர்ஜென்டினா அணியில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி விளையாடுவாரா என்பது தெளிவாக தெரியவில்லை. இதை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் முடிவு செய்யும். கேரளாவில் நடைபெறும் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி யாரை எதிர்கொள்கிறது என்பது தெரியவில்லை.

3 / 6
ஃபிஃபாவின் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் அணியை அர்ஜென்டினா எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது. கேரளாவில் அர்ஜென்டினாவை எதிர்த்து ஆசிய அணிகளான ஜப்பான் (15), ஈரான் (19), தென் கொரியா (22), ஆஸ்திரேலியா (24), கத்தார் (46) ஆகிய நாடுகள் மோதலாம்.

4 / 6
அர்ஜென்டினா அணி விளையாடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை காலை 9 மணிக்கு கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் வி.அப்துரஹ்மான் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜென்டினா போட்டிக்காக கேரளா சுமார் ரூ. 100 கோடி செலவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

5 / 6
முன்னதாக, அர்ஜென்டினா அணியை கேரளாவிற்கு அழைத்து வருவதற்கான அதிக செலவை தங்களால் தாங்க முடியாது என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அழைப்பை நிராகரித்தது. ஆனால், கடந்த 2011ம் ஆண்டு மெஸ்ஸி இடம்பெற்றிருந்த அர்ஜென்டினா அணி கொல்கத்தாவில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

6 / 6
Latest Stories