Tamilnadu Weather Alert: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கே? - Tamil News | as low pressure prevails in bay of bengal orange alert for chennai and 10 districts with heavy rainfall alert imd report in tamil | TV9 Tamil

Tamilnadu Weather Alert: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கே?

Published: 

12 Nov 2024 13:08 PM

கடந்த 24 மணி நேரத்தில், மண்டலம் 14 பெருங்குடி (சென்னை) 8, மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை), மண்டலம் 13 அடையார் (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை), YMCA நந்தனம் ARG (சென்னை) தலா 6 மழை பதிவாகியுள்ளது.

1 / 6நேற்று

நேற்று (11-11-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, மதியம் 1430 மணி அளவில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இன்று (12-11-2024) காலை 0830 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யவாய்ப்புள்ளது.

2 / 6

நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதேபோல் 14 ஆம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

3 / 6

வரும் 15 ஆம் தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 16 ஆம் தேதி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

4 / 6

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கூடிய மிதமான – பலத்த மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கன – மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

5 / 6

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான - கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

6 / 6

கடந்த 24 மணி நேரத்தில், மண்டலம் 14 பெருங்குடி (சென்னை) 8, மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை), மண்டலம் 13 அடையார் (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை), YMCA நந்தனம் ARG (சென்னை) தலா 6, மண்டலம் 12 மீனம்பாக்கம் (சென்னை), எண்ணூர் AWS (திருவள்ளூர்), பெருங்குடி (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), தரமணி ARG (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!