இந்த உணவெல்லாம் சாப்பிட்டால் உங்கள் பற்களின் நிறம் மாறும்! கவனமாக இருங்கள்… - Tamil News | avoid the food for teeth whitening causing yellow color | TV9 Tamil

இந்த உணவெல்லாம் சாப்பிட்டால் உங்கள் பற்களின் நிறம் மாறும்! கவனமாக இருங்கள்…

Updated On: 

16 Sep 2024 20:57 PM

Teeth Whitening: பற்கள் முத்து போல அழகாக மின்னுவதற்கு யாருக்குத்தான் ஆசை இருக்காது. சிலர் எத்தனை முறை பல் துலக்கினாலும் பற்களில் கறைகள் போவதில்லை. வெண்ணிற பற்களுக்காக சில ஆயிரக்கணக்கில் செலவழித்து வெண்மையாக்கி கொள்கிறார்கள். ஆனால் சில உணவுகளை தவிர்த்தாலே பற்களில் மஞ்சள் கறை ஏற்படாமல் தடுக்கிறது.

1 / 5பற்கள்

பற்கள் முத்துப் போல் அழகாக மின்னுவதற்கு யாருக்குத்தான் ஆசை இருக்காது? அவ்வப்போது பல் மருத்துவமனைக்கு சென்று சிலர் பற்களை தொடர்ந்து சுத்தம் செய்வது உண்டு. ஆனால் பற்களின் வெண்மையை பராமரிப்பது எளிதான காரியம் அல்ல. தினமும் இரண்டு முறை பல் துலக்கினாலும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் போவதில்லை. பற்களின் இந்த நிறமாற்றம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக்குகிறது.

2 / 5

பற்களின் வெண்மையை பராமரிக்க, தினமும் பல் துலக்குவதோடு சில உணவு கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும். உணவு பழக்க வழக்கங்களும் பற்களின் நிறங்களை மாற்றும் என்கிறார்கள் நிபுணர்கள். குறிப்பாக தேநீர் மற்றும் காபி‌ அருந்துவதால் பற்களின்‌ நிறம் மாறுகிறது. கருங்காபி‌ வழக்கமாக அருந்துவதால் பற்களில் மஞ்சள் கறையை ஏற்படுத்துகிறது. இதுக்கு மாற்றாக கிரீன் டீ அருந்துவது நல்லது.

3 / 5

சிவப்பு ஒயின் அருந்துவது மூலமாக பல் சொத்தையை‌ உண்டாக்கும். இந்த பானத்தில் அதிக அளவு அமிலங்கள் உள்ளதால் பற்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும். அதேபோல் சோயா சாஸ் கொண்டு செய்யப்படும் உணவுகளும் பற்களுக்கு நல்லதல்ல. சோயா சாஸ் பற்களை நிறமாற்றம் செய்கிறது.

4 / 5

சோடா போன்ற குளிர்பானங்கள் ஆரோக்கியத்திற்கும் பற்களுக்கும் நல்லதல்ல. குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை பற்களில் உள்ள எனாமலை (Enamel) அளிக்கிறது.

5 / 5

புகையிலை எந்த வடிவாக எடுத்துக் கொண்டாலும் அது பற்களுக்கு கேடு விளைவிக்கும். புகையிலையை பயன்படுத்துவதால் பற்களில் கருப்பு கறை ஏற்படுகிறது

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?