வேர்க்கடலை பலரால் விரும்பப்படும் உணவாகும். இது பயணத்தின் போது அதிகம் சாப்பிடப்படும் ஒரு உணவு வகை. இது சுவையானது மட்டுமல்ல பல உடல்நலப் பிரச்சினைகளை குணப்படுத்தும் ஆற்றலும் கொண்டது. வேர்க்கடலையில் கால்சியம், இரும்பு, தாமிரம், ஃபோலேட், பாஸ்பரஸ், மாங்கனிசு, மெக்னீசியம், பி1, பி3, பி6, வைட்டமின் ஈ ஆகியவை உள்ளது. மேலும் இவை இதய நோயிலிருந்து தோள் பராமரிப்பு வரை பல நன்மைகளை வழங்குகிறது.