Turmeric Water: பட்டு போன்ற பளபளப்பான சருமம் வேண்டுமா? மஞ்சள் கலந்த நீரை பயன்படுத்துங்க! - Tamil News | benefits of turmeric for your skin and how to use it details in tamil | TV9 Tamil

Turmeric Water: பட்டு போன்ற பளபளப்பான சருமம் வேண்டுமா? மஞ்சள் கலந்த நீரை பயன்படுத்துங்க!

Published: 

17 Nov 2024 19:36 PM

Benefits of Turmeric Water: மஞ்சளில் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி பெரும்பாலும் அனைவரும் அறிந்ததுதான். மஞ்சள் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மிக முக்கியமான பொருள்களில் ஒன்று. மஞ்சள் கிருமி நாசினியாகவும்‌ பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. பளபளப்பான சருமத்திற்கு மஞ்சளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 5மஞ்சளில்

மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் குர்குமின் நமக்கு மிகவும் நன்மை பயக்கும். மஞ்சள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. பளபளப்பான சருமத்திற்கு, மஞ்சளைப் பயன்படுத்தி பல வகையான ஃபேஸ் பேக்குகளை தயாரிக்கலாம். இதனுடன் தினமும் மஞ்சள் கலந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் மஞ்சள் நீரில் முகத்தைக் கழுவி வந்தால், சில நாட்களில் ஒரு வித்தியாசத்தைக் காண்பீர்கள்.

2 / 5

மஞ்சள் நீர் பளபளப்பான நிறத்தை அளிக்கிறது. தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு மஞ்சள் நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் கடுமையான தோல் பிரச்சனைகள் கூட குணமாகும். முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகள் பிரச்சனையை விரைவில் தீர்க்கும்.

3 / 5

மஞ்சளில் உள்ள சத்துக்கள் சருமத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகிறது. சேதமடைந்த சரும செல்களை சரிசெய்வதில் மஞ்சள் நீர் ஒரு அதிசயம் போல் செயல்படுகிறது. முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் நிறமிகளைப் போக்க மஞ்சள் தண்ணீரையும் பயன்படுத்தலாம்.

4 / 5

இரவில் வெகுநேரம் விழித்திருப்பது உங்கள் கண்களுக்குக் கீழே கருவளையங்களைத் தரும். அவை உங்கள் அழகைக் கெடுக்கும். தினமும் இரவில் படுக்கும் முன் மஞ்சள் கலந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்கு ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு சூடாக்கி அதனுடன் 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். அந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக குறைந்த பிறகு, அடுப்பை அணைத்து, தண்ணீரை வடிகட்டவும். ஆறிய பிறகு முகத்தில் பயன்படுத்தலாம்.

5 / 5

மஞ்சள் தண்ணீரை முகத்தில் தடவுவதற்கு முன் சாதாரண நீரில் முகத்தை கழுவவும். பின் இந்த நீரில் முகம் மற்றும் தோலை சுத்தமாக கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தோல் அழற்சி நீங்கும். இது முகத்தில் உள்ள முகப்பரு பிரச்சனையை போக்குகிறது.

மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.13,000 தள்ளுபடி!
புடவையில் சொக்க வைக்கும் நடிகை அஞ்சலி
அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷிற்கு டும் டும் டும்?
தமிழ் சீரியல்களின் டாப் 10 டிஆர்பி லிஸ்ட் இதோ