10 ஆண்டுகளாக டாப்.. 27 சதவீதம் வரை ரிட்டன்.. இந்த Mutual Funds தெரியுமா? | Best performing sectoral mutual funds of the last 10 years Tamil news - Tamil TV9

10 ஆண்டுகளாக டாப்.. 27 சதவீதம் வரை ரிட்டன்.. இந்த Mutual Funds தெரியுமா?

Published: 

12 Dec 2024 18:32 PM

Mutual Funds: கடந்த 10 ஆண்டுகளில் 27 சதவீதம் வரை வருவாய் அளித்த 5 துறை ரீதியிலான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். மேலும், இந்தப் ஃபண்டுகளில் செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகை எவ்வளவு ரிட்டன் அளித்துள்ளது என்பது குறித்தும் பார்க்கலாம்.

1 / 7இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இன்றைய தலைமுறை முதலீட்டாளர்கள் கான்ட்ரா ஃபண்ட் திட்டங்களில் கூட முதலீடு செய்கின்றனர். மற்ற ஃபண்ட் திட்டங்களை காட்டிலும் இந்தத் திட்டங்கள் அதிகளவில் ரிஸ்க் கொண்டவை ஆகும்.

இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இன்றைய தலைமுறை முதலீட்டாளர்கள் கான்ட்ரா ஃபண்ட் திட்டங்களில் கூட முதலீடு செய்கின்றனர். மற்ற ஃபண்ட் திட்டங்களை காட்டிலும் இந்தத் திட்டங்கள் அதிகளவில் ரிஸ்க் கொண்டவை ஆகும்.

2 / 7

குவாண்ட் இன்ஃப்ரா ஃபண்ட் கடந்த 5 ஆண்டுகளில் 26.92 சதவீதம் எஸ்.ஐ.பி வருமானம் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி ரூ.5 ஆயிரம் ஆகும். இத்திட்டத்தில் மாதம் ரூ.12,500 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு 62 லட்சமாக உயர்ந்துள்ளது.

3 / 7

இன்வெஸ்கோ இந்தியா இன்ப்ரா திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் 25.1 சதவீதம் வருவாய் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி ரூ.500 ஆகும். இந்தத் திட்டத்தில் ரூ.12,500 மாதாந்திர எஸ்.ஐ.பி 10 ஆண்டுகளில் 56 லட்சமாக வளர்ச்சி கண்டுள்ளது.

4 / 7

ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் டெக்னாலஜிஸ் ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் 24.38 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது. திட்டத்தின் குறைந்தப்பட் எஸ்.ஐ.பி ரூ.100 ஆகும். இதில் ரூ.12,500 மாதாந்திர முதலீடு 54 லட்சமாக வருவாய் கொடுத்துள்ளது.

5 / 7

ஃப்ராங்ளின் பில்டு இந்தியா ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் 24.08 சதவீதம் ரிட்டன் அளித்துள்ளது. இத்திட்டத்தில் மாதம் ரூ.12,500 எஸ்.ஐ.பி வருவாய் 53 லட்சமாக அதிகரித்துள்ளது. திட்டத்தில் மாதாந்திர குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி ரூ.500 ஆகும்.

6 / 7

டி.எஸ்.பி இந்தியா டைகர் ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் 24.03 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இத்திட்டத்தின் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி முதலீடு ரூ.100 ஆகும். மாதம் ரூ.12,500 எஸ்.ஐ.பி ரூ.53 லட்சமாக ரிட்டன் அளித்துள்ளது.

7 / 7

பொறுப்பு துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்வதற்கு முன்னர் செபி-யால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெற பரிந்துரைக்கப்படுகிறது.

டிசம்பர் மாதத்தில் நாம் செல்ல வேண்டிய அழகிய சுற்றுலா இடங்கள்!
ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ டிப்ஸ்!
ஒல்லியாக இருப்பவர்கள் இந்த காரணங்களால் எடை அதிகரிப்பது கிடையாது..!
கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் படைத்த டாப் 10 சாதனைகள்..!