தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க வேண்டும். காயத்தினால் ரத்தம் கசிந்தால் அந்த இடத்தை நன்றாக அழுத்திப் பிடிக்க வேண்டும். எக்காரணம் கொண்டு காயம் பட்ட இடத்தில் மண், மஞ்சள், காபித்தூள், பேனா மை, சுண்ணாம்பு போன்றவற்றை கண்டிப்பாக வைக்கக் கூடாது. அது பாதிக்கப்பட்டவருக்கு மேலும் பாதிப்பை கொடுக்கும்.