Diwali 2024: பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க! - Tamil News | Best ways to celebrate safer diwali with crackers details in tamil | TV9 Tamil

Diwali 2024: பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

Updated On: 

17 Oct 2024 14:33 PM

Safety Diwali: தீபாவளி வந்து விட்டாலே அனைவரும் உற்சாகமாகி விடுவார்கள். குழந்தைகள் பட்டாசு வெடிப்பதற்காகவே தீபாவளி நாட்களை எண்ணிக்கொண்டே இருப்பார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெடி வெடித்து அந்த நல்ல நாளை கொண்டாடி மகிழ்வர். ஆனால் அந்த நல்ல நாளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பான முறையில் வெடி வெடிப்பதற்கு சிறந்த வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 6பட்டாசு

பட்டாசு வெடிக்கும் போது அருகில் வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் வாளிகள் அல்லது சாக்குகளில் மணல் வைத்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது. பட்டாசு வெடிக்கும் போது காட்டன் உடைகளை பயன்படுத்துங்கள். பாலிஸ்டர் உடை எளிதில் தீப்பற்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. வெடித்த பட்டாசுகளிலிருந்து காயம் ஏற்படாமல் இருப்பதற்கு செருப்பு கட்டாயம் அணிய வேண்டும்.

2 / 6

குழந்தைகள் வெடி வெடிக்கும் பொழுது அவர்கள் கையில் கையுறை அணியுங்கள். பட்டாசின் வெளிச்சம் குழந்தையின் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதால் அவர்களுக்கு கண்ணாடி அணிந்து விடுங்கள். மேலும் மூச்சுத் திணறல் உள்ளவர்கள் முக கவசம் அணிந்து கொள்ளுங்கள்.

3 / 6

எந்த வெடி வைத்தாலும் அதன் அருகில் நீண்ட நேரம் நிற்க வேண்டாம். வெடி வெடிக்கும் பொழுது கூடுதல் பாதுகாப்புடன் வெடிக்க வேண்டும்.‌ பட்டாசு வெடிப்பதற்கு என்றே விற்கப்படும் நீண்ட ஊதுபத்தியை பயன்படுத்துங்கள். பெரியவர்கள் கையில் பட்டாசை வைத்து வெடிக்காதீர்கள். அதைப் பார்த்து குழந்தைகளும் செய்ய முயற்சிப்பார்கள். பட்டாசு எந்த நேரத்திலும் வெடிக்கக் கூடியது. எனவே குழந்தைகள் பட்டாசை கையில் வைத்து தூக்கிப் போடுவதை அனுமதிக்காதீர்கள்.

4 / 6

குடியிருப்பு பகுதிகளில் பட்டாசை வெடிக்காமல் அருகில் மைதானம் இருந்தால் அதை பயன்படுத்துங்கள். வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் யாரேனும் உங்கள் பகுதியில் இருந்தால் அவர்களுக்கு தொந்தரவு தரும்படி சத்தத்தோடு பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

5 / 6

தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க வேண்டும். காயத்தினால் ரத்தம் கசிந்தால் அந்த இடத்தை நன்றாக அழுத்திப் பிடிக்க வேண்டும். எக்காரணம் கொண்டு காயம் பட்ட இடத்தில்  மண், மஞ்சள், காபித்தூள், பேனா மை, சுண்ணாம்பு போன்றவற்றை கண்டிப்பாக வைக்கக் கூடாது. அது பாதிக்கப்பட்டவருக்கு மேலும் பாதிப்பை கொடுக்கும்.

6 / 6

அவசர ஊர்தி, தீயணைப்புத்துறை எண்கள் போன்றவற்றை முன்னதாகவே பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் அருகில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த தீபாவளியை விபத்து இல்லா தீபாவளியாக கொண்டாடி மகிழுங்கள்.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...
நடிகை மடோனாவின் நியூ ஆல்பம்..!
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாரு தெரியுமா..?