Virat Kohli Records: குவிய காத்திருக்கும் சாதனைகள்.. பார்டர் – கவாஸ்கர் டிராபியில் துரத்தி பிடிப்பாரா விராட் கோலி..? - Tamil News | BGT 2024-25: Indian star player Virat Kohli's achievements in the Border Gavaskar Trophy | TV9 Tamil

Virat Kohli Records: குவிய காத்திருக்கும் சாதனைகள்.. பார்டர் – கவாஸ்கர் டிராபியில் துரத்தி பிடிப்பாரா விராட் கோலி..?

Published: 

18 Nov 2024 09:48 AM

BGT 2024-25: ஆஸ்திரேலிய மண்ணில் சச்சின் டெண்டுல்கர் இதுவரை 110 போட்டிகளில் விளையாடி மொத்தம் 20 சதங்கள் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி இதுவரை 16 சதங்கள் அடித்துள்ளதால் அதை முறியடிக்க முடியும்.

1 / 6பார்டர்

பார்டர் கவாஸ்கர் டிராபி வருகின்ற நவம்பர் 22ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பெர்த்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளன. இந்தநிலையில், பார்டர்-கவாஸ்கர் டிராபில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி படைக்கவிருக்கும் மிகப்பெரிய சாதனைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

2 / 6

விராட் கோலி அடிலெய்டில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் 509 ரன்கள் எடுத்துள்ளார். அடிலெய்டில் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைக்க கோலிக்கு 102 ரன்கள் மட்டுமே உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் லாரா இந்த ஸ்டேடியத்தில் 611 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

3 / 6

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சர்வதேச ரன்கள் எடுத்த இந்தியர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி ஆஸ்திரேலியாவில் அனைத்து வடிவங்களிலும் 11 சதங்கள் மற்றும் 19 அரை சதங்களுடன் 3426 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் 3500 சர்வதேச ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமைக்கு விராட் இன்னும் 74 ரன்கள் தேவையாக உள்ளது.

4 / 6

விராட் கோலி அடிலெய்டில் அனைத்து வடிவங்களையும் சேர்த்து 11 போட்டிகளில் 5 சதங்களுடன் 957 ரன்கள் எடுத்துள்ளார். கோலி 1000 ரன்களை கடக்க இன்னும் 43 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. 1000 ரன்களை கடந்தால் அடிலெய்டில் 1000 ரன்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை கோலி படைப்பார்.

5 / 6

ஆஸ்திரேலிய மண்ணில் சச்சின் டெண்டுல்கர் இதுவரை 110 போட்டிகளில் விளையாடி மொத்தம் 20 சதங்கள் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி இதுவரை 16 சதங்கள் அடித்துள்ளதால் அதை முறியடிக்க முடியும்.

6 / 6

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 110 போட்டிகளில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் டெண்டுல்கர் மட்டுமே. இந்தநிலையில், விராட் கோலி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 97 சர்வதேச போட்டிகளில் விளையாடி 5,203 ரன்கள் எடுத்துள்ளார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100க்கு அதிகமாக சர்வதேச போட்டிகளில் விளையாடுவார்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.13,000 தள்ளுபடி!
புடவையில் சொக்க வைக்கும் நடிகை அஞ்சலி