Bigg Boss 8 Contestants List: சின்னத்திரை டூ வெள்ளித்திரை… பிக்பாஸ் போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இதோ! - Tamil News | Bigg Boss Tamil Season 8 Contestants full list here | TV9 Tamil

Bigg Boss 8 Contestants List: சின்னத்திரை டூ வெள்ளித்திரை… பிக்பாஸ் போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இதோ!

Updated On: 

07 Oct 2024 00:09 AM

Bigg Boss Tamil Season 8 Contestants List: தொடர்ந்து 100 நாட்கள் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இதோ.

1 / 18தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். கடந்த ஆண்டு வரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகராக இருந்த ரவீந்தர் தற்போது பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.

2 / 18

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்லம்மா சீரியலில் முன்னணி நடிகையாக நடித்து பிரபலம் ஆனவர் அன்ஷிதா. இவர் குக் வித் கோமாளி 5ல் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

3 / 18

விஜய் டிவியில் சக்கைப்போடு போட்ட பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடித்து பேமஸ் ஆனவர் அருண் பிரசாத். இவரும் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார்.

4 / 18

தமிழ் சின்னத்திரையில் நடிகராக வலம் வருபவர் தீபக். பல்வேறு சீரியல்களில் முன்னணி நடிகராக நடித்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

5 / 18

நடிகை தர்ஷா குப்தாவும் பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். இவர் விஜய் டிவி சீரியல்களில் நடித்ததோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

6 / 18

விஜய் டிவி சீரியல்களில் நடித்தது மட்டுமின்றி அண்மையில் நடந்து முடிந்த ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டு அசத்திய தர்ஷிகா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

7 / 18

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பேமஸ் ஆனவர் ஜாக்குலின். இவரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.

8 / 18

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருடந்தோறும் ஒரு பாடகரை அனுப்புவார்கள். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஜெப்ரி என்பவரை அனுப்பி இருக்கிறார்கள். இவர் கானா பாடல் பாடுவதில் கில்லாடி.

9 / 18

யூடியூப் சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியதோடு, இன்ஸ்டாவில் பிரபலாமனவராக இருக்கும் முத்துக்குமார் பிக்பாஸ் 8-ல் எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் தமிழ்பேச்சு எங்கள் மூச்சு என்கிற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டவர் ஆவார்.

10 / 18

செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் அர்னவ். அந்த சீரியல் முடிந்த கையோடு பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார் சீரியல் நடிகர் அர்னவ்.

11 / 18

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் பவித்ரா ஜனனி. இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.

12 / 18

பொன்விலங்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஞ்சித். சிந்து நதி பூ, மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, நினைத்தேன் வந்தாய், நட்புக்காக, தேசிய கீதம், புதுமைப்பித்தன், சேரன் சோழன் பாண்டியன், நினைவிருக்கும் வரை, சபாஷ், பாண்டவர் பூமி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில வருடங்களாக சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார். இவரும் பிக்பாஸில் களமிறங்கி இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

13 / 18

ரேடியோவில் ஆர்.ஜே.வாக பணியாற்றி பின்னர் கோமாளி படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் தங்கையாகவும் நடிகர் யோகிபாபுவுக்கு மனைவியாக நடித்து பிரபலம் ஆனவர் தான் ஆர்.ஜே.ஆனந்தி. இவரும் பிக்பாஸில் களமிறங்கி இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

14 / 18

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அவரது 50-வது படமாக வெளியான ‘மகாராஜா’ படத்தில் நடித்தவர் நடிகை சச்சிதா. இவர் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து பிரபலமானார். பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள இளம் போட்டியாளராக சச்சிதா உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

15 / 18

சீரியல் நடிகர் சத்யா பிக்பாஸ் சீசன் 8ல் கலந்துகொண்டுள்ளார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா சீரியலில் வில்லனாக நடித்து பேமஸ் ஆனார். இவரது மனைவி ரம்யா பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

16 / 18

ஆதித்ய வர்மா, தர்பார் போன்ற படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்திருந்தவர் செளந்தர்யா. இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கெடுத்து உள்ளார்.

17 / 18

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர் சுனிதா. பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வந்த சுனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

18 / 18

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரமான எழில் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் வி.ஜே. விஷால். தற்போது சீரியலை விட்டு வெளியேறிய நிலையில் வி,ஜே.விஷால் பிக்பாஸில் களமிறங்கி இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Follow Us On
இந்த பிரச்சனை இருந்தால் கொய்யாப்பழம் சாப்பிடக்கூடாதாம்..
தினமும் வெல்லம் கலந்த பால் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காலிஃபிளவர்..!
உடலுக்கு ஊட்டச்சத்துகளை தாராளமாக தரும் புளி..
Exit mobile version