Milk Tips: பாலை அதிக நேரம் கொதிக்க வைத்தால் தீங்கு ஏற்படுமா? இதோ விளக்கம்! - Tamil News | Boiling a packet milk for a long time causes bad and it affects the health details in tamil | TV9 Tamil

Milk Tips: பாலை அதிக நேரம் கொதிக்க வைத்தால் தீங்கு ஏற்படுமா? இதோ விளக்கம்!

Published: 

16 Oct 2024 13:19 PM

Boiling Milk: பாலில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பாலில் உள்ள கால்சியம் நமது எலும்புகளை பலப்படுத்துகிறது. அதனால் தான் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் தினமும் ஒரு குவளை பால் குடிப்பது நல்லது. பாலில் உள்ள சத்துக்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் நம் நாட்டில் கிட்டத்தட்ட அனைவரும் பாலை கொதிக்க வைத்த பிறகுதான் பயன்படுத்துகிறார்கள்.

1 / 5முன்பெல்லாம்

முன்பெல்லாம் மாடு வைத்திருப்பவர்களிடம் சென்று நமக்கு தேவையான பாலை எடுத்து வரும் வழக்கம் இருந்தது.‌ இல்லையென்றால் அவர்களே நமது இடத்திற்கு வந்து பாலை கொடுத்துவிட்டு செல்வார்கள்.‌ தற்பொழுது அந்த வழக்கம் நடைமுறையில்‌ இல்லை. பெரும்பாலும் எல்லா பகுதிகளிலும் பால் பாக்கெட் வாங்குவது வாடிக்கையாகி விட்டது.‌ பால் வாங்கிய பின்பு அதை சூடாக்க வேண்டும். இல்லையெனில் அதில் உள்ள பாக்டீரியா அழியாது. பாலை சூடாக்குவதற்கு முக்கிய காரணம் இதுதான். இருப்பினும் பாக்கெட் பாலை சூடாக்குவது தீங்கு விளைவிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

2 / 5

பால் பதப்படுத்தப்பட்ட பிறகு தான் பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது. ஆபத்தான பாக்டீரியாவை அழிக்க ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் பால் சூடுபடுத்தப்படுகிறது. அதாவது 71 டிகிரி செல்சியஸ்க்கு வெப்பப்படுத்தப்பட்டு பிறகு மீண்டும் பூஜ்ஜிய டிகிரிக்கு குளிர்விக்கப்படுகின்றன. அதன் பிறகு அவை பதப்படுத்தப்பட்டு பேக் செய்யப்படுகின்றன.

3 / 5

ஆனால் 71 டிகிரி செல்சியஸில் சூடு படுத்தி மீண்டும் குளிர்வித்தால் அதன் ஊட்டச்சத்து அளவு பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.‌ பாலை வீட்டிற்கு கொண்டு வந்த பிறகும் பாக்கெட் பாலை சூடாக்கினால் அதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் புரத‌ சத்துக்கள் ஆகியவை அழிந்து விடும்.‌ எனவே பாக்கெட் பால் நல்ல நிலையில் இருந்தால் அவற்றை கொதிக்க வைக்காமல் பயன்படுத்துவது நல்லது என்று‌ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

4 / 5

பாக்கெட் பால் மட்டுமில்லாமல், பால் வியாபாரிகளிடம் நேரடியாக வாங்கும் பாலையும் திறந்த பாத்திரத்தில் சூடாக்க வேண்டும். இல்லையெனில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதற்குள் நுழைகின்றது. பாக்கெட் பாலை காய்ச்சுவதற்கு பதிலாக அதை லேசாக சூடாக்கினால் பாக்டீரியாக்கள் அளிக்கப்படுவதோடு அதில் உள்ள சத்துக்கள் குறையாமல் பாதுகாக்கப்படும்.

5 / 5

பாக்கெட் பால் பயன்படுத்துபவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்திகிறார்கள். பாலை அடுப்பில் வைத்து ஐந்து நிமிடம் சூடாக்கினால் போதும். அதை அதிக வெப்பமாக்க வேண்டாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.‌ பாலை சேமித்து வைக்காமல் அன்றைய பால் பாக்கெட்டை பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீரின்றி உயிர் வாழும் பாலைவன விலங்குகள் என்னென்ன?
உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குவது எப்படி?
மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!