Boost Memory Power: ஞாபக மறதியை குறைக்க 4 சூப்பர்ஃபுட்கள்.. நினைவாற்றல் அதிகரிக்கும்..! - Tamil News | Boost Memory Power 4 Superfoods to Boost Memory; health tips in tamil | TV9 Tamil

Boost Memory Power: ஞாபக மறதியை குறைக்க 4 சூப்பர்ஃபுட்கள்.. நினைவாற்றல் அதிகரிக்கும்..!

Published: 

05 Nov 2024 23:23 PM

Superfoods: மூளை ஆரோக்கியமாகவும் கூர்மையாகவும் இருக்க சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துகொள்வது முக்கியம். இவற்றைச் சாப்பிட்ட பிறகு மூளை வேகமாகச் செயல்படத் தொடங்கும். அந்தவகையில், மூளை வலுவாக இருக்க என்ன சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 / 6உடல்

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கு உடற்பயிற்சி முதற்கொண்டு சில விஷயங்களை மேற்கொள்கிறோம். ஆனால், மூளை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தவறிவிடுகிறோம். இதனால், நாம் ஞாபக மறதி உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்.

2 / 6

மூளை ஆரோக்கியமாகவும் கூர்மையாகவும் இருக்க சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துகொள்வது முக்கியம். இவற்றைச் சாப்பிட்ட பிறகு மூளை வேகமாகச் செயல்படத் தொடங்கும். அந்தவகையில், மூளை வலுவாக இருக்க என்ன சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

3 / 6

இனிப்பு உருளைக்கிழங்கில் பீட்டா கரோட்டின் மற்றும் ஆக்ஸிஜனேற்றி நிறைந்துள்ளது. இது மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது. மேலும், இனிப்பு உருளைக்கிழங்கில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் உள்ள கார்டிசோலின் அளவைக் குறைத்து, மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

4 / 6

பாதாம் பருப்புகள் மூளைக்கு ஒரு சூப்பர் உணவு. பாதாமில் வைட்டமின் ஈ, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. பாதாமை பச்சையாக சாப்பிடுவதற்கு பதில், வறுத்து சாப்பிடுவது ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் அதிகரிக்க செய்யும். இது மூளை செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

5 / 6

வறுத்த ப்ரோக்கோலியில் வைட்டமின் கே, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது மூளை மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டிற்கு முக்கியமானது. ப்ரோக்கோலியை வேகவைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.

6 / 6

அக்ரூட் பருப்புகள் ஒமேகா 3 இன் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. இது மூளை ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் மூளை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

குழந்தைகளின் கோபத்தை கட்டுப்படுத்த எளிய வழிகள் இதோ!
இந்தியாவின் மிக நீளமான ரயில் நிலையங்கள் எவை தெரியுமா?
புகைப்படங்களை சோதிக்க வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் - விரைவில் அறிமுகம்!
அவரைப் போல இருக்க வேண்டும் - நடிகை பார்வதியின் ஆசை