IND vs AUS: ஆஸி., உடனான 3வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா.. வில்லனாக வரும் கனமழை! - Tamil News | Brisbane Weather: According rain for five days in India vs Australia 3rd Test BGT 2024-25 | TV9 Tamil

IND vs AUS: ஆஸி., உடனான 3வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா.. வில்லனாக வரும் கனமழை!

Published: 

14 Dec 2024 06:00 AM

BGT 2024-25: இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெறும் ஐந்து நாட்களில் மின்னல் மற்றும் புயலுடன் மேகமூட்டமான வானிலை இருக்கும். இருப்பினும், இது போட்டியை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

1 / 5இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டுமென்றால், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டுமென்றால், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்.

2 / 5

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி முக்கியமானது. ஆனால், இந்த போட்டிக்கு மழை அச்சுறுத்தல் உள்ளதாகவும், ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 / 5

பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் நாளான இன்று 80% மழையும், இரண்டாவது நாள் 50% மழையும், மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாம் நாள் 70% மழையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் பிற்பகல் வேளைகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 / 5

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெறும் ஐந்து நாட்களில் மின்னல் மற்றும் புயலுடன் மேகமூட்டமான வானிலை இருக்கும். இருப்பினும், இது போட்டியை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வது கடினமாகிவிடும்

5 / 5

இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 57.29 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைய, தொடரை குறைந்தபட்சம் 3-2 அல்லது 2-1 என்ற கணக்கில் வென்றிருக்க வேண்டும். இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டால் இந்திய அணி 12 புள்ளிகளுக்குப் பதிலாக 4 புள்ளிகள் மட்டுமே பெற்று பாதை கடினமாகிவிடும்.

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள்
தினமும் பிஸ்தா சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமா..? இந்த 9 உணவுகள் உதவும்..!
அதிகப்படியான உப்பு சாப்பிட்டால் என்னாகும்?