Budjet 2024: இந்தமுறை வரி சலுகை இருக்குமா? மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு! - Tamil News | | TV9 Tamil

Budjet 2024: இந்தமுறை வரி சலுகை இருக்குமா? மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு!

Updated On: 

20 Jun 2024 16:18 PM

Union Budget: 2024 இடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்படாத நிலையில், இனி தாக்கல் செய்யப்பட உள்ள முழு பட்ஜெட்டில் பழைய மற்றும் புதிய வருமான வரி முறையில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இருக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

1 / 62024-25ஆம்

2024-25ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 22ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கடந்த பிப்ரவரியில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.தற்போது பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக ஜூலை 3ஆவது வாரத்தில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 / 6

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையை கடந்த பிப்ரவரியில் சமன் செய்த நிர்மலா சீதாராமன், இப்போது புதிய சாதனை படைக்க உள்ளார்

3 / 6

இந்த பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் நிலையை மேம்படுத்தவும் சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது. . புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள், அரசின் முதலீட்டை அதிகரிப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகள், முதியவ்ரகளுக்கான பிரத்யேக திட்டங்களும், புதிய சலுகைகளும் இடம்பெற வாய்ப்புள்ளது.

4 / 6

முழு பட்ஜெட்டில் வருமான வரி வலிக்கு உச்ச வரம்பு, ஜிஎஸ்டி திருத்தங்கள், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு இருக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதுவும் ரூ.10 லட்சம் ஆண்டு வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கான வரி விதிப்பில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

5 / 6

2024 இடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்படாத நிலையில், இனி தாக்கல் செய்யப்பட உள்ள முழு பட்ஜெட்டில் பழைய மற்றும் புதிய வருமான வரி முறையில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 / 6

2023ல் செய்யப்பட்ட மாற்றங்களில் புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரியில் ரூ.7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வருடம் இதில் எதுவும் மாற்ற செய்யப்படவில்லை. அதே சமயம் பழைய வருமான வரி விதிப்பு முறையில் மத்திய அரசு கடந்த வருடமும், இந்த வருடமும் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்