சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெல்லம் சாப்பிடலாமா? நிபுணர்கள் பரிந்துரைப்பது என்ன? - Tamil News | Can people with diabetics eat jaggery what the experts say details in tamil | TV9 Tamil

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெல்லம் சாப்பிடலாமா? நிபுணர்கள் பரிந்துரைப்பது என்ன?

Published: 

26 Nov 2024 08:48 AM

Jaggery Usage: பொதுவாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்துவார்கள். வெல்லம் சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு மாறாது என்கின்றனர் நிபுணர்கள்.

1 / 5சமீப

சமீப காலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளம் வயதினரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இனிப்பு சாப்பிடுவது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனால் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்துகிறார்கள்.

2 / 5

இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், வெல்லம் சாப்பிடுவது நல்லது தான். ஆனால் அதில் இனிப்பு குணங்களும் அதிகம். எனவே வெல்லம் சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்று நினைக்க வேண்டாம். வெல்லம் சாப்பிடுவதாலும் ரத்தத்தில் சர்க்கரையில் அளவு அதிகரிக்கும்.

3 / 5

வெல்லத்திலும் சுக்ரோஸ் உள்ளது. எனவே வெல்லும் சாப்பிட்டாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். வெல்லம் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பது தவறு.

4 / 5

அதிகமாக சர்க்கரையை நேரடியாக சாப்பிடுவது நல்லதில்லை என்பதால் வெல்லம் அதற்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதை சாப்பிட்டால் நல்லது. ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிப்பது உறுதி.

5 / 5

வெல்லத்திலும் கலோரிகள் அதிகம் உள்ளது. அதை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்கும். உடல் பருமனால் நீரிழிவு நோயும் மோசமாகும்.

இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்
உருளைக்கிழங்கு இப்படி இருந்தால் சாப்பிட வேண்டாம்..!
பால் காஃபி அல்லது பிளாக் காஃபி... எது நல்லது?