காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து உங்கள் காருக்கு காப்பீடு பெற விரும்பினால், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இதற்கு முதலில் செய்ய வேண்டியது காரில் சேதத்தை கண்டவுடன் கார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கும் முகவருக்கும் அதை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு விரைவாக உதவி கிடைக்கும். மேலும் அந்த உதவியை உடனடியாக முகவர் ஏற்பாடு செய்ய முடியும்.