Car Insurance: பட்டாசு வெடித்து கார் சேதமடைந்தால் காப்பீடு கிடைக்குமா? விவரங்கள் இதோ… - Tamil News | Can you get insurance if your car is damaged by Diwali firecrackers details in Tamil | TV9 Tamil

Car Insurance: பட்டாசு வெடித்து கார் சேதமடைந்தால் காப்பீடு கிடைக்குமா? விவரங்கள் இதோ…

Published: 

30 Oct 2024 08:39 AM

Car Insurance: தீபாவளி அன்று தெருக்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் அதே சமயத்தில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதாலும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தைய சூழ்நிலையில் பட்டாசு வெடிப்பதால் உங்கள் காருக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனம் காப்பீடுகளை வழங்குகிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 5நாடு

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. பட்டாசு சத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது. பட்டாசு வெடிப்பதில் மகிழ்ச்சியில் கிடைத்தாலும் எதிர்பாராத விதமாக சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுகிறது. தெருவோரங்களில் பட்டாசு வெடிக்கும் போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களில் பட்டு விபத்துக்குள்ளாகிறது. இதுபோன்று தீ விபத்து ஏற்பட்டு காருக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அத்தகைய சூழ்நிலையில் காப்பீட்டு நிறுவனம் காப்பீடு வழங்குமா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

2 / 5

கார்களுக்கு மூன்று வகையான இன்சூரன்ஸ் பாலிசிகள் உள்ளது. இதில் மூன்றாம் தரப்பு கார் காப்பீடு என்பது சுயமாக ஏற்படும் சேதம் மற்றும் விரிவான கார் காப்பீடு ஆகியவை உள்ளடங்கும். தீ அல்லது வெடிப்பு காரணமாக உங்கள் காருக்கு ஏற்படும் சேதம் விரிவான மற்றும் முழுமையான கார் காப்பீட்டு கொள்கைகளில் உள்ளது.

3 / 5

காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து உங்கள் காருக்கு காப்பீடு பெற விரும்பினால், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இதற்கு முதலில் செய்ய வேண்டியது காரில் சேதத்தை கண்டவுடன் கார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கும் முகவருக்கும் அதை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு விரைவாக உதவி கிடைக்கும். மேலும் அந்த உதவியை உடனடியாக முகவர் ஏற்பாடு செய்ய முடியும்.

4 / 5

சேதம் அடைந்த யாருக்கு எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து முழுமையான விவரங்கள் கிடைத்த பிறகு போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்வார்கள். பொதுவாக ஒரு கார் தீ பிடித்து சேதம் அடைந்தால் காப்பீட்டு நிறுவனங்கள் எஃப்ஐஆர் கேட்கின்றனர். இது விபத்து நடந்த தேதி, நேரம் மற்றும் இடம் பற்றிய சரியான விவரங்களை அறிய உதவுகிறது. உங்கள் கோரிக்கை செல்லும்படியாகும் பட்சத்தில் காப்பீட்டு முகவர் உங்கள் கோரிக்கையை ஏற்பார்.

5 / 5

கார் பேட்டரி அல்லது மின் வயரிங் போன்றவற்றிலிருந்து தீப்பொறி காரணமாக கார் தீ பிடித்தால் உங்களது கோரிக்கை நிராகரிக்கப்படும். மேலும் ஏசி அல்லது எல்ஜிபி‌ காஸ் கிட் மாற்றும்போது அல்லது புதிய இணைப்பை உருவாக்கும் போது தவறுதலாக தீ விபத்து ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனம் உங்களின் கோர்க்கையை நிராகரிக்கும். ஏதேனும் உள் பிரச்சனை, எண்ணெய் கசிவு அல்லது அதிக வெப்பம் காரணமாக கார் சேதமடைந்தால் அதற்கும் காப்பீட்டு தொகை கிடைக்காது

படுத்தவுடன் தூங்குவதற்கான டிப்ஸ்கள் - முயற்ச்சி செய்து பாருங்கள்!
ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும் - ஏன் தெரியுமா?
ஒரு மனிதரிடம் இருக்க வேண்டிய மிக உயர்ந்த பண்புகள் இவைதான்!
இரவில் தூங்குவதற்கு முன்பு குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்!