Chapped Lips: பருவ மாற்றத்தால் உதடுகளில் வெடிப்பா..? சரிசெய்ய எளிய குறிப்புகள் இதோ! - Tamil News | Chapped Lips Remedies: How to get rid of chapped lips in 4 ways; skin care in tamil | TV9 Tamil

Chapped Lips: பருவ மாற்றத்தால் உதடுகளில் வெடிப்பா..? சரிசெய்ய எளிய குறிப்புகள் இதோ!

Published: 

21 Nov 2024 16:21 PM

Skin Care: வெடித்த உதடுகளில் வாஷ்லின் உள்ளிட்டவற்றை தடவக்கூடாது. இது தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. அந்தவகையில், வீடுகளில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உதடு வெடிப்பு பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்று பார்ப்போம்.

1 / 6மழை

மழை மற்றும் குளிர் காலத்தில் உதடுகள் விரிசல் ஏற்படும். ஒரு சில நேரங்களில் வெடித்த உதடுகள் வழியாக இரத்தம் வருவது மட்டுமின்றி, எரிச்சலும் ஏற்படும். மேலும், இது வெளி தோற்றத்தை கெடுத்து, சுயமதிப்பை இழக்க செய்யும். பலரும் உதடு வெடிப்பு பிரச்சனையை சரி செய்ய வாஷ்லின் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள்.

2 / 6

முக்கியமான விஷயம் என்னவென்றால், வெடித்த உதடுகளில் வாஷ்லின் உள்ளிட்டவற்றை தடவக்கூடாது. இது தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. அந்தவகையில், வீடுகளில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உதடு வெடிப்பு பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்று பார்ப்போம்.

3 / 6

உதடுகளில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மிகவும் அவசியம். அந்தவகையில், ஈரப்பதத்தை தக்கவைக்க இறந்த சரும செல்கலை அகற்ற வேண்டும். இதற்கு சர்க்கரையுடன் தேன் கலந்து உதடுகளில் தடவினால் சரியாகும்.

4 / 6

பெண்கள் வெளியில் செல்லும்போது உதட்டில் வெடிப்புகளை மறைக்க லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வார்கள். ஆனால் வீட்டிற்கு வந்ததும் மீண்டும் உதடு வெடிப்பு பிரச்சனை வரும். இதற்கு கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவுவதன்மூலம் சரி செய்யலாம்.

5 / 6

காய்ந்த உதடுகளை சரிசெய்யவும், உதடுகளை கூடுதல் ஈரப்பதத்துடன் வைக்கவும் லிப் பாம் சிறந்த தீர்வாகும். இரவில் தூங்குவதற்கு முன் வைட்டமின் ஈ அல்லது ஷியா பட்டர் லிப் பாம் தடவலாம். இது உதடு வெடிப்பு பிரச்சனைக்கு நிவாரணம் தரும்.

6 / 6

இரவில் படுக்கும் போது உதடுகளை கவனித்துக்கொள்வது முக்கியம். எனவே, இரவில் படுக்கும் முன் நல்லெண்ணெயை தேனுடன் கலந்து, அந்த கலவையை தூங்கும் முன் தடவவும். இது உதடுகளை ஈரமாக வைத்திருக்கும்.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?