Chennai Air Show: ரக ரகமாய் பறந்த விமானங்கள்.. மெரினாவை அதிரவைத்த விமான சாகசம்! - Tamil News | Chennai Air show Jaw dropping IAF aerobatics steals hearts in Marina Beach tamil news | TV9 Tamil

Chennai Air Show: ரக ரகமாய் பறந்த விமானங்கள்.. மெரினாவை அதிரவைத்த விமான சாகசம்!

Published: 

06 Oct 2024 17:04 PM

சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணிக்கு பிரம்மாண்டமாக விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் கடந்த 2003ஆம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடந்த நிலையில், 21 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் இன்று நடைபெற்றது.

1 / 8சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணிக்கு பிரம்மாண்டமாக விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் கடந்த 2003ஆம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடந்த நிலையில், 21 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் இன்று நடைபெற்றது.

2 / 8

பொதுவாக விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் டெல்லியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்காக கடந்த 3 நாட்களாக முன்கூட்டியே ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில், இன்று பிரம்மாண்டமாக காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை விமான சாகசம் நடந்தது.

3 / 8

இதில் 72 விமானங்கள் கலந்து கொண்டன. அதன்படி, சுகோய்-30 எம்கேஐ, ரஃபேல், மிராஜ் 2000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போன்ற போர் விமானங்கள் சாகசத்தை நிகழ்த்தின. போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் Mi-17 மற்றும் பிரசாந்த் LCH (இலகுவான போர் ஹெலிகாப்டர்) போன்ற ஹெலிகாப்டர்கள், டகோட்டா மற்றும் ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டன.

4 / 8

முதலில் hello jump-வுடன் சாகசம் தொடங்கியது. விமானப்படை வீரர்கள் தேச விரோத சக்திகளிடம் இருந்து பிணை கைதிகளை மீட்கும் சாகசம் நடந்தது. தொடர்ந்து, மூவர்ண பாராசூட் மூலம் தேசிய மற்றும் விமானப்படை கொடியை ஏந்தி விமான படை வீரர்கள் para jump செய்தனர். இந்திய விமானப்படையில் சக்தி வாய்ந்த, அதிகவேக விமானமாக ரபேல், புயல் என்ற பெயரில் சூப்பர் சோனிக் ஓட்டத்தை நிகழ்த்தியது. தீப்பொறிகளை உமிழ்ந்தபடி, சூப்பர் சோனிக் ஓட்டத்தை நிகழ்த்தியது.

5 / 8

அதேபோல சேரர், பாண்டியர், சோழர், காஞ்சி நடராஜன், பல்லவர் என குழக்களாக பிரிந்து தேஜஸ், ஜாக்குவார் உள்ளிட்ட விமானங்கள் சாகசத்தை நிகழ்த்தின. புகைகளை கக்கியப்படி விமானங்கள் பறந்ததை மக்கள் கண்டு களித்தனர். இதேபோல, ஹெலிகாப்டர்கள் மூவர்ண கொடியை வரைந்து சாகசத்தை நிகழ்த்தின.

6 / 8

மேலும், விமானங்களும், ஹெலிகாப்டர்களுக்கு இதயம் வடிவத்தை வரைந்து மக்களின் மனங்களை கவர்ந்தன. மேலும், வானில் விமனாங்களும், ஹெலிகாப்டர்களும் அங்குமிங்கும் பறந்து, உயர சென்றும், அதேவேகத்தில் தரையை நோக்கி வந்தும் சாகத்தை நிகழ்த்திய மக்களை மெய் சிலிர்க்க வைத்தன.

7 / 8

இந்த விமான சாசக நிகழ்ச்சியை பார்க்க ஏரளாமான மக்கள் மெரினாவில் குவிந்தனர். சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. கொளுத்தும் வெயிலையும் நினைக்காமல் மக்கள் கூட்டம் மெரினாவில் அலைமோதியது. மக்கள் குடைகளுடன் மெரினா சென்று, விமான சாகச நிகழ்சசியை கண்டு களித்தனர். குறிப்பாக இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் மக்கள் அதிகளவு குவிந்தனர்.

8 / 8

சென்னை நடந்த விமான சாகச நிகழ்ச்சி மாபெரும் சாதனையை படைத்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்பதால் சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சி தற்போது லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளது. மெரினாவில் நடந்த சாகச நிகழ்ச்சியை சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us On
பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காலிஃபிளவர்..!
உடலுக்கு ஊட்டச்சத்துகளை தாராளமாக தரும் புளி..
தூங்குவதற்கு முன் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்
நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
Exit mobile version