5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நெருங்கும் புயல்… சென்னைக்கு அதி கனமழை அலர்ட்… வெதர்மேன் முக்கிய தகவல்!

Fengal Cyclone: இன்றும், நாளையும் சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மதியம் முதல் மீண்டும் கனமழை பெய்யும். இந்த மழை இரவு தீவிரம் அடைந்து, நாளை வரை அதி கனமழை பெய்யக் கூடும் என்று கூறியுள்ளார்.

umabarkavi-k
Umabarkavi K | Published: 29 Nov 2024 14:30 PM
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  அடுத்த 3 மணி  நரத்தில் புயலாக வலுப்பெறும் என்று வானிலை  மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். நேற்று (28-11-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (29-11-2024) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக, நாகபட்டினத்திலிருந்து சுமார் கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 340 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

1 / 5
இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில்  புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை  கடற்கரையை, காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே,  புதுவைக்கு அருகே 30-ஆம் தேதி மதியம் புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

2 / 5
இதன் காரணமாக, இன்றும், நாளையும் சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மதியம் முதல் மீண்டும் கனமழை பெய்யும். இந்த மழை இரவு தீவிரம் அடைந்து, நாளை வரை அதி கனமழை பெய்யக் கூடும்.  இது ஞாயிற்றுகிழமை வரையும் அதிகனமழை பெய்யலாம்" என்று தெரிவித்துள்ளார்.  மேலும், நாளை புயல் கரையை கடக்கும்போது வட தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

3 / 5
இன்றும், நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இன்று வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் (நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம்,  சென்னை, திருவள்ளூர், மாவட்டங்கள்) புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

4 / 5
நாளை வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில்  சூறாவளிக்காற்று வீசக்கூடும் -  மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை  பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும்,  நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி,  கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர்  மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

5 / 5
Latest Stories