சென்னையில் 28 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த ரூட் தெரியுமா? நோட் பண்ணுங்க! - Tamil News | Chennai electric train cancelled from today beach to tambaram route due to maintenance work | TV9 Tamil

சென்னையில் 28 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த ரூட் தெரியுமா? நோட் பண்ணுங்க!

Published: 

22 Nov 2024 07:57 AM

Chennai Train Cancelled : சென்கை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று முதல் இருமார்க்கத்திலும் 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

1 / 5சென்னையில்

சென்னையில் ரயில் போக்குவரத்து மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை புறநகர் மற்றும் உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையான மின்சார ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை கடற்கரை - திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - பட்டாபிராம் ஆகிய வழித்தடங்களில் தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

2 / 5

இதில் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடங்களில் மட்டும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். மின்சார ரயில்கள் ஒருநாள் இல்லையென்றாலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ரயில்வே நிர்வாகமும் ரயில்களை சரியான முறையில் பராமரித்து வருகிறது. மேலும், இந்த வழித்தடங்களில் அவ்வப்போதும் பராமரிப்பு பணிகளும் நடந்து வருகிறது.

3 / 5

இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் இன்று முதல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களின் இருமார்க்கத்திலும் 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

4 / 5

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 14 ரயில்களும், தாம்பரம் - கடற்கரை இடையே 14 ரயில்களும் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. இதனால், செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் அங்கிருந்து கடற்கரைக்கு வரும் ரயில்களின் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 / 5

மேலும், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை இயக்கப்படும் மற்ற ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 நிமிஷத்திற்கு பதிலாக 10 நிமிஷம் தாமதமாக ரயில்கள் இயக்கப்படும். மேலும், மற்ற ரயில்களின் நேரம் முற்றிலுமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்குகேற்ப பயணிகள் திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!