வங்கக் கடலில் ஃபெங்கல் புயல்.. எப்போது கரையை கடக்கும்? சென்னைக்கு ஆபத்தா? - Tamil News | chennai red alert over fengal cyclone formed in south west bay of bengal | TV9 Tamil

வங்கக் கடலில் ஃபெங்கல் புயல்.. எப்போது கரையை கடக்கும்? சென்னைக்கு ஆபத்தா?

Updated On: 

29 Nov 2024 19:28 PM

Cyclone Fengal : தென்மேற்கு வங்கக் கடலில் ஃபெங்கல் புயல் உருவானது. இந்த புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

1 / 5தென்மேற்கு வங்கக் கடலில் ஃபெங்கல் புயல் உருவானது. இந்த புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக  வானிலை மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஃபெஞ்சல் புயல் தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாளை  பிற்பகல் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்" என்றார்.

தென்மேற்கு வங்கக் கடலில் ஃபெங்கல் புயல் உருவானது. இந்த புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஃபெஞ்சல் புயல் தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாளை பிற்பகல் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்" என்றார்.

2 / 5

மேலும், அவர் கூறுகையில், "ஃபெங்கல் புயல் புதுச்சேரிக்கு அருகே 270 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. நாளை பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரத்துக்கு அருகே புயலாக கரையை கடக்கக் கூடும். புயலால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். புயல் கரையை கடக்கும்போது விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும். புயல் காரணமாக அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும்" என்று தெரிவித்துள்ளார்.

3 / 5

நாளை தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. தற்போது 13 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வரும் நிலையில், நாளை பிற்பகல் கரையை கடக்கும்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

4 / 5

இதனால் கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. அதேபோல, சென்னை துறைமுகத்தில் 6ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மின் சேவைகள் தொடர்பாக 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

5 / 5

புயல் எச்சரிக்கை காரணமாக, கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சள் நீரில் எந்த வைட்டமின் நிறைந்துள்ளது..?
குளிர் காலத்தில் மலிவு விலையில் செல்லக்கூடிய சுற்றுலா இடங்கள்!
உங்கள் அன்பை அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
மழைக்காலத்தில் ஜில் தண்ணீர் குடிக்கலாமா?