5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சென்னையில் மின்சார ரயில் ரத்து.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா?

Chennai Special Buses: பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Published: 24 Nov 2024 22:06 PM
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதாவது, வரும் 28ஆம் தேதி வரை பகுதியாக ரயில்கள் ரத்து செய்யப்பபடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மின்சார ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் பயணித்து வரும் நிலையில், கடந்த 22ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

1 / 5
இதுகுறித்து சென்னை  மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள  அறிவிப்பில், இன்று முதல் 28ஆம் தேதி வரை பிற்பகல் 1.20 மணி முதல்  4.20 மணி வரை செங்கல்பட்டு ரயில்வே பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரையில் இருந்து  செங்கல்பட்டு செல்லும்  ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும். இதனால் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

2 / 5
பயணிகள் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம்  10 சிறப்பு பேருந்துகளை சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து செங்கல்பட்டு பேருந்து நிலையத்திற்கு இயக்க உள்ளது. மறுமார்க்கத்திலும்  செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வரை இயக்க உள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

3 / 5
கடந்த 21ஆம் தேதி முதல் சென்னையில் 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 14 ரயில்களும், தாம்பரம் - கடற்கரை இடையே 14 ரயில்களும்   ரத்து செய்யப்பட்டது. இதனால், செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் அங்கிருந்து கடற்கரைக்கு வரும் ரயில்களின் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 / 5
மேலும், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில்  காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை இயக்கப்படும் மற்ற ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.  மேலும், 5 நிமிஷத்திற்கு பதிலாக 10 நிமிஷம் தாமதமாக ரயில்கள் இயக்கப்படும்.  மேலும், மற்ற ரயில்களின் நேரம் முற்றிலுமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.   இதனால் தான் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

5 / 5
Latest Stories