Chennai Traffic Changes: வெளுக்கும் கனமழை.. சென்னையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்! - Tamil News | chennai traffic changes in vadapalani koyembedu triplicane and others areas due to heavy rain in chennai | TV9 Tamil

Chennai Traffic Changes: வெளுக்கும் கனமழை.. சென்னையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

Updated On: 

15 Oct 2024 18:30 PM

தொடர் மழையால் சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சென்னையின் பிரதான சாலைகள், குடியிருப்புகள், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. வேளச்சேரி, பெரம்பூர், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகிறது.

1 / 5சென்னை

சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, செங்ல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறுநாள் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படியே நேற்று இரவு முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.

2 / 5

இதனால் சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சென்னையின் பிரதான சாலைகள், குடியிருப்புகள், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. வேளச்சேரி, பெரம்பூர், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

3 / 5

மேலும், போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையல், சென்னையில் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மேட்லி சுரங்கப்பாதை (தெற்கு) - கண்ணம்மாபேட்டை - முத்துரங்கன் சாலை - 17 அடி சாலை - அரங்கநாதன் சுரங்கப்பாதை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

4 / 5

சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் - வள்ளூவர் கோட்டம் சந்தில் இருந்து நோக்கி வரும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலை சந்திப்பு வழியாக லயோலா கல்லூரிக்கு திருப்பி விடப்படும். பெரியார் பாதையில் இருந்து நெற்குன்றம் பாதை, வடபழனி - வடபழனி வரும் வாகனம் திருப்பி விடப்பட்டது. வெளியே செல்லும் வாகனம் கோயம்பேட்டில் திருப்பி விடப்பட்டுள்ளது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

5 / 5

மேலும், ஐஸ் ஹவுஸிலிருந்து GRH சந்திப்புக்கு வரும் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் திருவல்லிக்கேனி ஹை ரோட்டை நோக்கி வலதுபுறம் திரும்பி, ரத்னா கபே வழியாக ஜாம் பஜார் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, மார்க்கெட் மற்றும் ராயப்பேட்டை டவர் வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். மேலும் மோட்டார் சைக்கிள்கள் திசைதிருப்பப்படாமல் தங்கள் வழியில் செல்லாம். GRH சந்திப்பில் இருந்து ஐஸ் ஹவுஸ் வரும் வாகனங்களுக்கு மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?
ஆப்பிள் ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கும் அமேசான்!
பெருஞ்சீரகம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?