Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளதா..? உங்கள் பாதங்களை கொண்டே அறியலாம்..! - Tamil News | cholesterol Symptoms: know these symptoms of increasing bad cholesterols in your body in tamil | TV9 Tamil

Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளதா..? உங்கள் பாதங்களை கொண்டே அறியலாம்..!

Published: 

10 Nov 2024 18:08 PM

Cholesterol Symptoms: கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகரித்து கொண்டே போகிறது. அந்தவகையில், கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது சில அறிகுறிகள் தோன்றும். பெரும்பாலான மக்களுக்கு இது தெரிவதில்லை. உங்கள் கால்களில் அதிக கொலஸ்ட்ரால் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

1 / 6உடலில்

உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ரால் சத்தமில்லாமல் பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமையும். பலர் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரும்போது, அதன் அறிகுறிகளை அடையாளம் காண்பது கிடையாது. இதனால் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையும் ஏற்படும்.

2 / 6

நவீன வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவு முறையும் கெட்ட கொலஸ்ட்ரால் ஏற்படுவதற்கு முக்கிய காரணம். இன்றைய தலைமுறையினரிடம் இந்த பிரச்சனை அதிகமாகவே உள்ளது. குறிப்பாக இளைஞர்களிடம் கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகரிப்பதால் 40 வயதிற்குள்ளே மாரடைப்பு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

3 / 6

கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகரித்து கொண்டே போகிறது. அந்தவகையில், கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது சில அறிகுறிகள் தோன்றும். பெரும்பாலான மக்களுக்கு இது தெரிவதில்லை. உங்கள் கால்களில் அதிக கொலஸ்ட்ரால் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

4 / 6

காலையில் எழுந்தவுடன் அசாதாரணமாக வீங்கிய பாதங்களை, கண்டால் உடனடியாக எச்சரிக்கையாக இருங்கள். யூரிக் அமிலத்தில் அதிகரிப்பால் கால் வீக்கம் ஏற்படுகிறது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், பாதங்கள் வீக்கத்திற்கு காரணம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதே காரணம்.

5 / 6

சில நேரங்களில் கால்களில் வலி, மரத்து போகின்ற உணர்வுகள் ஏற்படும். கால்களில் இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் குவிவதால் இது நிகழ்கிறது. இதனால், கால்களுக்கு சரியான இரத்த ஓட்டம் ஏற்படாமல், தேங்கி நிற்கும். இதனால்தான் கால் வலி ஏற்பட தொடங்கும். இது இரவில் தூங்கும்போது ஏற்படலாம்.

6 / 6

ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், கால் நரம்புகள் பாதிக்கப்படும். இது கால் பிடிப்புகள் மற்றும் கால் வீக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அறிகுறியாகும். இதுபோன்ற அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?