CNG Cars : பெட்ரோல், டீசல் தேவையில்லை.. சூப்பரான 5 CNG கார்கள்! - Tamil News | cng cars india 2024 better mileage maruti suzuki wagonr alto k10 tata tiago hyundai details in tamil | TV9 Tamil

CNG Cars : பெட்ரோல், டீசல் தேவையில்லை.. சூப்பரான 5 CNG கார்கள்!

Updated On: 

15 Jul 2024 17:05 PM

Budget CNG Cars : நல்ல மைலேஜ் மற்றும் குறைந்த செலவில் கார் ஓட்டுவது யாருக்குத்தான் பிடிக்காது? சிறந்த மைலேஜ் மற்றும் குறைந்த ஓட்டச் செலவுக்காக நீங்கள் சிஎன்ஜி காரை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த 5 கார்களைப் பார்க்கலாம். இந்த ஐந்து சிஎன்ஜி கார்களின் விலை ரூ.10 லட்சத்திற்கும் குறைவுதான்

1 / 5Maruti

Maruti Suzuki Alto K10 CNG:: மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மலிவான சிஎன்ஜி கார் ஆகும். சிஎன்ஜி பதிப்பின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.73 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. ஆல்டோ கே10 சிஎன்ஜி ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 33.85 கிமீ மைலேஜ் தரும் என்று மாருதி சுஸுகி கூறுகிறது.

2 / 5

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸை சிஎன்ஜி மாடலிலும் வாங்கலாம். i10 Nios இன் CNG பதிப்பின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.68 லட்சம். இந்த சிஎன்ஜி கார் மூலம் ஒரு கிலோ சிஎன்ஜி மைலேஜுக்கு தோராயமாக 25.61 கிமீ மைலேஜை பெற முடியும்

3 / 5

Maruti Suzuki S-Presso: இந்த கார் ஒரு மலிவான CNG கார் ஆகும். சிஎன்ஜியில், இந்த சிஎன்ஜி ஹேட்ச்பேக் கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 32.73 கிமீ மைலேஜ் தரும். சிஎன்ஜி மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.91 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

4 / 5

Maruti Suzuki WagonR CNG: இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான WagonR, CNG பதிப்பிலும் வருகிறது. வேகன்ஆர் சிஎன்ஜியின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.44 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த சிஎன்ஜி கார், ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 34.05 கிமீ மைலேஜ் தருகிறது

5 / 5

Tata Tiago iCNG: டாடா மோட்டார்ஸின் CNG கார்களில் iCNG தொழில்நுட்பம் கிடைக்கிறது. டாடா டியாகோ சிஎன்ஜி பதிப்பை ரூ.8.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் தொடக்க விலையில் வாங்கலாம். இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.47 கிமீ மைலேஜ் தரும்.

Follow Us On
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version