Dandruff Control: பொடுகு தொல்லையால் அவதியா? இந்த முறையை செய்து பாருங்க! - Tamil News | Control dandruff in the head like this details in Tamil | TV9 Tamil

Dandruff Control: பொடுகு தொல்லையால் அவதியா? இந்த முறையை செய்து பாருங்க!

Published: 

17 Nov 2024 17:55 PM

Dandruff Control: பெரும்பாலானோர் அதிகம் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று பொடுகு. பொடுகு பல உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும். அதிகப்படியான பொடுகு சரும பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். பொடுகு கொஞ்சம் கொஞ்சமாக தோன்றினாலும் அலட்சியப்படுத்தாமல் உடனே கட்டுப்படுத்த வேண்டும்.

1 / 5மற்ற

மற்ற பருவங்களை விட குளிர்காலத்தில் பொடுகு தொந்தரவு அதிகமாக இருக்கும். குளிர்காலம் வந்துவிட்டால் சரும பிரச்சனைகள் மட்டுமின்றி கூந்தல் பிரச்சனையும் ஏற்படும். பொடுகு மிகவும் பொதுவான பிரச்சனை. எனினும் பொடுகு ஒரு முறை தோன்றினால் விரைவில் மறையாது.

2 / 5

பொடுகு தொல்லையால் கூந்தலும் வறண்டு போகிறது. பொடுகு தொல்லையால் வெளியே செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்தப் பொடுகு தொல்லைக்கு பல வகையான வீட்டு வைத்தியங்கள் உள்ளது.

3 / 5

கற்றாழை மற்றும் தேயிலை மற எண்ணெயை கலந்து ஹேர் பேக்காக தடவலாம். இவற்றில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. எனவே இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினால் குளிர் காலத்தில் பொடுகு பிரச்சனைகள் எளிதில் குறையும்.

4 / 5

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவை பொடுகு பிரச்சனையை நிறுத்த பயன்படுத்தலாம். இவை இரண்டையும் கலந்து தலையில் தடவி வந்தால் பொடுகு குறையும். பத்து நிமிடம் அப்படியே வைத்திருந்து தலையை அலசினால் போதும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலனை தரும். கூந்தலும் சேதம் அடையாமல் இருக்கும்.

5 / 5

வாழைப்பழம் மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் பேக் கூட பொடுகை குறைக்கும். வாழைப்பழம் முடியை பளபளப்பாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்கும். ஆலிவ் எண்ணெய் முடி வறட்சியை குறைக்கும். இந்த பேக்கை தடவி 15 நிமிடம் கழித்து குளிக்கவும்

மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.13,000 தள்ளுபடி!
புடவையில் சொக்க வைக்கும் நடிகை அஞ்சலி
அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷிற்கு டும் டும் டும்?
தமிழ் சீரியல்களின் டாப் 10 டிஆர்பி லிஸ்ட் இதோ