Cracked Heels: மழைக்காலத்தில் பாதங்களில் வெடிப்பு பிரச்சனையா..? இந்த குறிப்புகள் தீர்வை தரும்! - Tamil News | cracked heels problem in monsoon and winter season follow these home tips | TV9 Tamil

Cracked Heels: மழைக்காலத்தில் பாதங்களில் வெடிப்பு பிரச்சனையா..? இந்த குறிப்புகள் தீர்வை தரும்!

Published: 

27 Nov 2024 22:28 PM

Monsoon Season: பெண்கள் துணி துவைப்பது, குழந்தைகளை குளிப்பாட்டுவது போன்ற தண்ணீர் சம்பந்தப்பட்ட செயல்களை மேற்கொள்ளும்போது குதிகால் வெடிப்பு பிரச்சனையை உண்டாக்கும். இதையடுத்து, குதிகால்களை பராமரிக்க வீட்டிலேயே சில வைத்தியங்களை மேற்கொள்ளலாம்.

1 / 6மழை மற்றும் குளிர்காலத்தில் முழங்கால்களுக்கு மட்டும் பிரச்சனை ஏற்படாது. இந்த பருவநிலை மாற்றத்தால் பாதங்களில் உள்ள தோல் வறண்டு, கடினமாகி வெடிக்க தொடங்கும். இதுவே, குதிகால் விரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.

மழை மற்றும் குளிர்காலத்தில் முழங்கால்களுக்கு மட்டும் பிரச்சனை ஏற்படாது. இந்த பருவநிலை மாற்றத்தால் பாதங்களில் உள்ள தோல் வறண்டு, கடினமாகி வெடிக்க தொடங்கும். இதுவே, குதிகால் விரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.

2 / 6

சில சமயங்களில் குதிகால் வெடிப்பினால் அதிக வலியும் ஏற்படும். குதிகால் வெடிப்பு அதிகரிக்கும்போது சில சமயங்களில் இரத்தமும் வெளியேற தொடங்கும். குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பு பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக ஏற்படும்.

3 / 6

பெண்கள் துணி துவைப்பது, குழந்தைகளை குளிப்பாட்டுவது போன்ற தண்ணீர் சம்பந்தப்பட்ட செயல்களை மேற்கொள்ளும்போது குதிகால் வெடிப்பு பிரச்சனையை உண்டாக்கும். இதையடுத்து, குதிகால்களை பராமரிக்க வீட்டிலேயே சில வைத்தியங்களை மேற்கொள்ளலாம்.

4 / 6

குதிகால் வெடிப்பு ஏற்படாமல் இருக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இது நல்ல பலனை தரும். தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே சருமத்திற்கு ஊட்டமளிக்கும் திறன் உள்ளது. அதன்படி, உங்கள் குதிகால்களை வெதுவெதுப்பான எண்ணெயால் மசாஜ் செய்தால் விரைவில் குணமாகும்.

5 / 6

கற்றாழை ஜெல் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது ஈரப்பதமூட்டும் முகவராக செயல்படுகிறது. குதிகால் வெடிப்பில் இருந்து நிவாரணம் பெற கற்றாழை ஜெல்லை பாதங்களில் தடவலாம். இது குதிகால்கள் பிரச்சனையை விரைவில் சரிசெய்யும்.

6 / 6

தேன் சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கிருமி நாசினிகள் குதிகால் வெடிப்புகளை குணப்படுத்தும். உங்கள் பாதங்களைக் கழுவி உலர்த்திய பின், அவற்றில் தேன் தடவலாம்.

கல்யாணம் கன்ஃபார்ம்... வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோ
இணையத்தை கலக்கும் பர்த்டே பேபி அனிகாவின் போட்டோஸ்
ஹீமோகுலோபின் அதிகரிக்க இந்த 7 ஜூஸ் ட்ரை பண்ணுங்க..
இந்த பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை நிச்சயம் சாப்பிடக்கூடாது.