மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000 நிவாரண நிதி வழங்கப்படும் என்றும்,பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு இழப்பீடாக ரூ.22,500 நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள சில ஊராட்சிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.