School Leave : கனமழை, வெள்ளம்.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! - Tamil News | cyclone fengal 3 taluks of cuddalore district declared holiday for schools december 4 due to heavy rain floods | TV9 Tamil

School Leave : கனமழை, வெள்ளம்.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Updated On: 

04 Dec 2024 07:11 AM

பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக இன்று (டிசம்பர் 4) விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள சில ஊராட்சிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, அண்ணாகிராமம் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

1 / 5கனமழை காரணமாக  இன்று (டிசம்பர் 4) சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள சில ஊராட்சிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, அண்ணாகிராமம் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஃபெங்கல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, இந்த புயலால் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால்  அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

கனமழை காரணமாக இன்று (டிசம்பர் 4) சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள சில ஊராட்சிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, அண்ணாகிராமம் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஃபெங்கல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, இந்த புயலால் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

2 / 5

கடந்த நவம்பர் 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நவம்பர் 27ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அது ஃபெங்கல் எனும் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பரவலான மற்றும் கடுமையாக மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழையின் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

3 / 5

இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக மக்களின் இயல்பு வாழ்ககை கடுமையாக பாதிக்கப்பட்டது.

4 / 5

இதனால் ஃபெங்கல் புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்தது. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.10,000 நிவாரணமும், முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட முன்னுரிமை வழங்கப்பட்டும் என்றும் கூறியுள்ளது.

5 / 5

மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000 நிவாரண நிதி வழங்கப்படும் என்றும்,பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு இழப்பீடாக ரூ.22,500 நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள சில ஊராட்சிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?