5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cyclone Fengal: நாளை உருவாகிறது ஃபெங்கல் புயல்… சென்னையில் கரையை கடக்கும்.. வானிலை மையம் அலர்ட்

Tamilnadu Red Alert: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் நாகை-சென்னை இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Nov 2024 13:17 PM
வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த 24ஆம் தேதி குநைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது படிப்படியாக வலுவடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர தொடங்கியது. நேற்று முன்தினம் இது தீவிர தாழ்வுநிலையாக மாறியது. நேற்று இன்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.   இந்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து 880 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 1050 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது.

1 / 5
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 2 தினங்களில் தமிழக-இலங்கை கடற்கரையை நெருங்கும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக வடமாவட்ட கடலோரத்தை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது.

2 / 5
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது  சென்னைக்கு தெற்கே-தென்கிழக்கே 800 கி.மீ தொலைவிலும், நாகைக்கு  தெற்கே - தென்கிழக்கே 600 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கே தென்கிழக்கே 720 கி.மீ தொலையில் மையம் கொண்டிருக்கிறது இது மணிக்கு மணிக்கு 12 கி.மீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி  நகர்ந்து வருகிறது.  இது இலங்கை வட கடலோர பகுதியை நெருங்கி பின்  தமிழ்நாட்டின் வட கடலோர பகுதியை நோக்கி புயலாக நகரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.  இந்த புயலுக்கு ஃபெங்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

3 / 5
இதனால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதன் தாக்கம் இன்று காலை முதலே டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.  இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்  பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், நாளை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்  மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல, 28ஆம் தேதி முதல் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

4 / 5
அதாவது, நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று காலை முதலே சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நாளை சென்னை, செங்கல்ட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், புயல் சென்னையை நெருக்கும்போது மழை இன்னும் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.

5 / 5
Latest Stories