School Leave: தொடரும் கனமழை..10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! - Tamil News | cyclone fengal school and colleges declared holiday today villupuram cuddalore and other districts in tamilnadu | TV9 Tamil

School Leave: தொடரும் கனமழை..10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Updated On: 

02 Dec 2024 08:20 AM

Cyclone Fengal: ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பின்பும் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மழை கொட்டி வருகிறது. ஏற்கனவே கடும் குளிரும் வாட்டி வதைப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 / 6கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

2 / 6

கடந்த நவம்பர் 24ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது நவம்பர் 27ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனைத் தொடர்ந்து ஃபெஞ்சல் புயலாக 29 ஆம் தேதி வலுப்பெற்றது. இந்த ஃபெங்கல் புயல் நவம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவு 11 மணியளவில் புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையை கடந்தது.

3 / 6

இந்த புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

4 / 6

புயல் கரையைக் கடந்த பின்பும் நேற்றும் வட மாவட்டங்களில் பல இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தேவையான உதவிகளை செய்து இன்னல்களில் இருந்து பொதுமக்களை மீட்டனர்.

5 / 6

இந்நிலையில் கொட்டித்தீர்க்கும் கனமழை மற்றும் எச்சரிக்கை காரணமாக இன்று (டிசம்பர் 2) சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய பள்ளிகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாமக்கலில் கொல்லிமலை தாலுகா மற்றும் நீலகிரியில் உதகை, கூடலூர், கோத்தகிரி தாலுக்காவுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது

6 / 6

அதேசமயம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், சென்னை, சிதம்பரம், சேலம் பல்கலைக்கழகங்களில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

குளிர் காலத்தில் பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல வேண்டுமா?
எந்த மாதிரி பார்ட்னர் கிடைத்தால் ஓகே சொல்லலாம்?
40 வயதிற்கு பிறகு கைவிட வேண்டிய பழக்கங்கள்..!
பூண்டு சாப்பிடுவது யாருக்கு நல்லதல்ல..?