Cyclone Fengal: நாளை காலை உருவாகும் புயல்.. ரெட் அலர்ட் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு! - Tamil News | Cyclone Fengal Update Deep Depression intensify into a cyclonic storm during next 12 hours | TV9 Tamil

Cyclone Fengal: நாளை காலை உருவாகும் புயல்.. ரெட் அலர்ட் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு!

Published: 

27 Nov 2024 22:10 PM

Weather Update: ஃபெங்கல் புயல் காரணமாக நவம்பர் 29ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

1 / 6வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது வலுவடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 25 ஆம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. நேற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில் இன்று புயலாக உருவாகும் என்று வானிலை மையம் கணித்திருந்தது.

வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது வலுவடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 25 ஆம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. நேற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில் இன்று புயலாக உருவாகும் என்று வானிலை மையம் கணித்திருந்தது.

2 / 6

இந்த புயலுக்கு ஃபெங்கல் எனவும் பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி இன்று புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் 3 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.

3 / 6

இது திருகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கில் சுமார் 100 கி.மீ, நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 320 கி.மீ. , புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 420 கி.மீ., சென்னைக்கு தென்-தென்கிழக்கு திசையில் 500 கி.மீ. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

4 / 6

அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30ஆம் தேதி காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை அடையும் என தெரிவித்துள்ளது. இதனால் ஏற்கனவே கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறைக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

5 / 6

ஆனால் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அதாவது கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 / 6

இதேபோல் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்யாணம் கன்ஃபார்ம்... வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோ
இணையத்தை கலக்கும் பர்த்டே பேபி அனிகாவின் போட்டோஸ்
ஹீமோகுலோபின் அதிகரிக்க இந்த 7 ஜூஸ் ட்ரை பண்ணுங்க..
இந்த பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை நிச்சயம் சாப்பிடக்கூடாது.