வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதுடன், தற்போது புயலாக உருவெடுத்து உள்ளது. அதாவது, வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த 24ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது வலுவடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர தொடங்கி, நேற்று முன்தினம் தீவிர தாழ்வுநிலையாக மாறியது. நேற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.