Fengal Cyclone: நெருங்கும் ஃபெங்கல் புயல்.. சென்னைக்கு ஆபத்து இருக்கா? வானிலை மையம் கூறுவது என்ன? - Tamil News | Cyclone Fengal very heavy rainfall predicted in chennai for 3 days IMD | TV9 Tamil

Fengal Cyclone: நெருங்கும் ஃபெங்கல் புயல்.. சென்னைக்கு ஆபத்து இருக்கா? வானிலை மையம் கூறுவது என்ன?

Published: 

26 Nov 2024 22:31 PM

Chennai Rains : ஃபெங்கல் புயல் நாளை (நவம்பர் 27) உருவாக உள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஃபெங்கல் புயல் சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.

1 / 5வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதுடன், தற்போது புயலாக உருவெடுத்து உள்ளது. அதாவது,  வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த 24ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது வலுவடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர தொடங்கி, நேற்று முன்தினம் தீவிர தாழ்வுநிலையாக மாறியது. நேற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதுடன், தற்போது புயலாக உருவெடுத்து உள்ளது. அதாவது, வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த 24ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது வலுவடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர தொடங்கி, நேற்று முன்தினம் தீவிர தாழ்வுநிலையாக மாறியது. நேற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

2 / 5

தற்போதைய நிலவரப்படி, தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் திரிகோணமலையில் இருந்து தென்கிழக்கே சுமார் 240 கி.மு தொலைவிலும், நாகப்பட்டினத்தில் தெற்கு – தென்கிழக்கே 520 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 720 கி.மீமு தொலைவிலும், சென்னையில் தென் கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

3 / 5

வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27ஆம் தேதி புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு தான் ’ஃபெங்கல்’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஃபெங்கல் புயல் இந்த புயல் இரு நாட்களில் மேலும் வடக்கு – வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

4 / 5

ஃபெங்கல் புயல் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை புதுச்சேரி இடையே கரையை கடக்கும்போது தீவிர புயலாக மாறும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, இன்று முதல் 29ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.

5 / 5

சென்னையில் இன்று காலை முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. புயல் உருவாகும் முன்மே சென்னையில் மழை பெய்து வருகிறது. இன்று காலை விட்டு விட்டு மழை பெய்ய தொடங்கிய நிலையில், தற்போது மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அதனை அகற்ற மாநாகராட்சி அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்