5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஃபெங்கல் புயலுக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

Chennai Rains: சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்தார். ஃபெங்கல் புயல் காரணமாக இன்று சென்னை உட்பட 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Nov 2024 17:08 PM
வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெங்கல் புயல் இன்று மாலை அல்லது நாளை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம்  உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால்  தமிழகத்தில்  சில தினங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 / 5
இன்று காலை முதலே சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகரில் மழை நீர் தேங்கியுள்ளது. சாலைகள், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இதனால் தேங்கிய மழைநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். புயல் கரையை கடந்தாலும் தேங்கியுள்ள மழைநீர் படிப்படியாக தான் குறையும். இந்த நிலையில்,  பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

2 / 5
அதாவது, ஃபெங்கல் புயல் கரையை கடந்ததும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்தார். அவர் கூறுகையில், "சென்னை உட்பட பிற மாவட்டங்களில் மழை மற்றும் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும், மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அளவிற்கு சீரமைக்கப்பட்ட பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும் என முதல்வர் உத்தவிட்டிருக்கிறார். எனவே, பணிகள் முடிந்தவுடம் பள்ளிகள் திறக்கப்படும்" என்றார்.

3 / 5
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் “ஃபெஞ்சல்” புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாக கடக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை வரை சென்னை உட்பட பிற மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4 / 5
மேலும், நாளை மறுநாள் திங்கள்கிழமை மழை தொடர்ந்தால் சென்னையில் விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், சாலைகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்ட பின்பும் தான் பள்ளிகள் திறக்கப்படும். இருப்பினும், நாளைக்குள் தேங்கிய மழைநீர் படிப்படியாக குறையும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு நாளை தான் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

5 / 5
Latest Stories