மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ”டானா புயல்”, வடக்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இரவு 11.30 மணி அளவில் தீவிர புயலாக வலுபெற்றது. மேலும் இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 0830 மணி அளவில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், பாரதீப்பிற்கு (ஒரிசா) தென்கிழக்கே 210 கிலோமீட்டர் தொலைவிலும், தாமரா (ஒரிசா) தெற்கு- தென்கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கே 310 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.