Dana Cyclone: கொந்தளிக்கும் கடல்.. தீவிரமான டானா புயல்.. உஷார் நிலையில் இருமாநிலங்கள்! - Tamil News | Dana cyclone reached close to odisa sea imd alert heavy rain odissa west Bengal Jharkhand | TV9 Tamil

Dana Cyclone: கொந்தளிக்கும் கடல்.. தீவிரமான டானா புயல்.. உஷார் நிலையில் இருமாநிலங்கள்!

Published: 

24 Oct 2024 19:10 PM

டானா புயல்: வங்கக் கடலில் உருவாகி உள்ள டானா புயல், தற்போது ஒடிசாவின் தென்கிழக்கு திசையில் நிலைக் கொண்டுள்ளது. இது தீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்கம், ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

1 / 5மத்தியகிழக்கு

மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ”டானா புயல்”, வடக்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இரவு 11.30 மணி அளவில் தீவிர புயலாக வலுபெற்றது. மேலும் இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 0830 மணி அளவில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், பாரதீப்பிற்கு (ஒரிசா) தென்கிழக்கே 210 கிலோமீட்டர் தொலைவிலும், தாமரா (ஒரிசா) தெற்கு- தென்கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கே 310 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

2 / 5

இது மேலும் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, பிதர்கனிகா மற்றும் தாமரா (ஒரிசா) அருகே மிகத்தீவிர புயலாக வலுப்பெற்றது. இது நாளை காலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில், அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3 / 5

இந்த டானா புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உஷார் நிலையில் இருக்கிறது. மேலும், ஜார்கண்ட், ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் மொத்தம் 56 தேசிய பேரிடம் குழுக்கள் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளன.

4 / 5

ஒடிசாவில் 20 தேசிய பேரிடம் மீட்பு குழுக்களும், மேற்கு வங்கத்தில் 13 குழுக்களும், ஆந்திரா மற்றும் ஜார்க்கண்டில் தலா ஒன்பது குழுக்களும், சத்தீஸ்கரில் ஒரு குழுவும் தயார் நிலையில் உள்ளன. டானா புயல் காரணமாக அக்டோபர் 24-ம் தேதி மாலை 5 மணி முதல் அக்டோபர் 25-ம் தேதி காலை 9 மணி வரை ஒடிசா மாநிலத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இன்று இரவு 8 மணி முதல் காலை 10 மணிகள் உள்ளூர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

5 / 5

மேலும், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ரயில்வே அக்டோபர் 24 மற்றும் 25ஆம் ஆகிய தேதிகளில் 150க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்துள்ளது. டானா புயல் காரணமாக மேற்கு மாநிலத்தின் தாழ்வான பகுதிகளில் இருந்து 3.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருப்பதாகவும், அவர்கள் வெளியேற வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. இதுவரை 2,43,374 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 13!
அதிகளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..?
இந்த ஹேண்ட்சம் சிறுவன் யார் தெரியுதா?
தங்க நிற உடையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே!