5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali 2024: சுற்றுச்சூழலை காக்கும் வகையில் தீபாவளி கொண்டாட விருப்பமா? இதை பின்பற்றுங்கள்!

Pollution Free Diwali: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த தீபாவளி திருநாளை கொண்டாட தயாராகி வருகிறார்கள். இன்றைய சூழலில் சுற்றுச்சூழல் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் இயற்கையின் மீது பலருக்கும் அக்கறை உண்டு. அந்த வகையில் இந்த தீபாவளியை பாதுகாப்பானதாகவும் இயற்கைக்கு மாசு விளைவிக்காத மாறும் தீபாவளியை கொண்டாட விரும்பினால் இதையெல்லாம் பின்பற்றுங்கள்.

mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 22 Oct 2024 13:41 PM
தீபாவளி என்பது அனைவரும் விரும்பும் தீபத் திருவிழா. தீபாவளியன்று தீபம் ஏற்றி, பட்டாசு வெடித்து, கோபூஜை மற்றும் லட்சுமி பூஜை செய்து பண்டிகையை கொண்டாடுகிறோம்.தீபாவளியன்று விளக்குகள் ஏற்றப்படுகின்றன. பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இவ்வாறு செய்வதால் காற்று மாசு ஏற்படுகிறது. ஆஸ்துமா, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) மற்றும் பிற சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது தொந்தரவாக இருக்கும்.

1 / 6
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மோசமான பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும் பட்டாசுகளை கொளுத்தி காற்று மாசு அதிகரிப்பது சரியல்ல என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். ஆனால் நீங்கள் தீபாவளியை சூழல் நட்பு முறையில் கொண்டாட நினைத்தால், இதை பின்பற்றுங்கள்

2 / 6
தீபாவளியை பாரம்பரியமாக கொண்டாடுங்கள். சந்தையில் பல அழகான, சூழல் சார்ந்து பொருட்கள் கிடைக்கும் போது அது சுற்றுச்சூழலுக்கு நல்லதாக அமைகிறது. பிளாஸ்டிக் பைகள் வாங்குவதை நிறுத்துங்கள். பிளாஸ்டிக்கிற்கு பதிலாக பாரம்பரிய மண் பானைகளை தேர்வு செய்யலாம். இதன் மூலம் உள்ளூர் கைவினைஞர்களையும் ஊக்குவிக்க முடியும்.

3 / 6
நீங்கள்  வண்ணங்களை பயன்படுத்த  விரும்பினால் இயற்கை வண்ணங்களைச் உபயோகிங்கள். தீபாவளி அன்று ரங்கோலிகள் அனைவருக்கும் பிடிக்கும். இது காலங்காலமாக இருந்து வரும் பாரம்பரியம். இந்த ஆண்டு ரங்கோலிக்கு ரசாயன வண்ணங்களுக்கு பதிலாக இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்துங்கள். அரிசி மாவு, மஞ்சள், சாமந்தி பூக்கள், ரோஜா இதழ்கள், கெமோமில் இதழ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ரங்கோலியை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்றலாம்.

4 / 6
தீபாவளியன்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அலங்காரப் பொருட்களைப் பரிசளிக்க நீங்கள் விரும்பினால், இந்த ஆண்டு உங்கள் நண்பர்களுக்கு கொஞ்சம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பரிசளிக்க முயற்சிக்கவும். ஒரு செடி, கரிம பொருட்கள், கையால் செய்யப்பட்ட அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை பரிசளிக்கவும். தீபாவளி அன்று பட்டாசுகளை பட்டாசு வெடிக்க விரும்பினால்  சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத பட்டாசுகளை வாங்கி வெடியுங்கள். பசுமை பட்டாசுகளை தேர்வு செய்யவும். மேலும், குறைந்த சத்தம் மற்றும் புகையை உருவாக்கும் பட்டாசுகளை கொளுத்தவும்.

5 / 6
LED விளக்குகளைப் பயன்படுத்துங்கள். தீபாவளி என்பது தீபங்களின் திருவிழா. இந்த பண்டிகை நாளில் உங்கள் வீடு பிரகாசமாக ஜொலிக்க வேண்டுமெனில், உங்கள் வீடுகளை அலங்கரிக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த LED விளக்குகளை தேர்வு செய்யலாம். மேலும், சுத்தமான எள் எண்ணெயில் தீபம் ஏற்றுவது ஆன்மீகத்திற்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

6 / 6
Latest Stories