மூச்சு திணறும் டெல்லி… உச்சத்தை தொட்ட காற்று மாசு.. கடும் கட்டுப்பாடுகள்! - Tamil News | delhi ncr air pollution grap 4 stage implemented from today | TV9 Tamil

மூச்சு திணறும் டெல்லி… உச்சத்தை தொட்ட காற்று மாசு.. கடும் கட்டுப்பாடுகள்!

Updated On: 

18 Nov 2024 07:38 AM

Delhi Air Pollution: டெல்லியில் கடும் பனிமூட்டம், காற்றும் மாசும் சேர்ந்து டெல்லி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காணரமாக இன்று முதல் டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் Grap-4 திட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

1 / 5டெல்லியில்

டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் ஏரிக்கப்படும் வேளாண் கழிவுகளே டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் காற்று மாசுபாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், தற்போது டெல்லியில் கடும் பனிமூட்டம், காற்றும் மாசும் சேர்ந்து டெல்லி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காணரமாக இன்று முதல் டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

2 / 5

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் மோசமடைந்தது. மாலை 4 நிலவரப்படி AQI 441 பதிவானது. இதன் காரணமாக, நாட்டிலேயே அதிக மாசுபட்ட நகரங்களில் டெல்லி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, ஹரியானாவில் உள்ள பஹதுர்கரில் அதிகபட்ச AQI 445 ஆக பதிவானது. அதைத் தொடர்ந்து டெல்லியில் 441, ஹரியானாவின் பிவானியில் 415 மற்றும் ராஜஸ்தானின் பிகானேரில் 404-ஆக பதிவாகி இருந்தது. டெல்லியில் உள்ள 40 கண்காணிப்பு நிலையங்களில், 32 கண்காணிப்பு நிலையங்கள் 'கடுமையான காற்றின் தரக்குறியீடு அளவுக்ள இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

3 / 5

இதனால் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் Grap-4 திட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் டெல்லியில் காற்றின் தரம் AQI 462 ஆக பதிவாகியுள்ளது. இது காற்று மாசுபாட்டின் அளவு மிகவும் தீவிரமானதை காட்டுகிறது. டெல்லியில் கிராப்-4 அமல்படுத்தப்பட்ட பிறகு, அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் மற்றும் அத்தியாவசிய சேவைகளுடன் வழங்கும் அனைத்து லாரிகள் டெல்லிக்கு நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

4 / 5

அதே நேரத்தில் மற்ற லாரிகள், மினி வண்டிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இது தவிர, டெல்லியில் பதிவு செய்யப்பட்ட டீசல் வாகனங்கள், கனரக சரக்கு வாகனங்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளைத் தவிர அனைத்து வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் செயல்படும். மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று முதல்வர் அதிஷி கூறினார்.

5 / 5

மேலும், நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், மின் பரிமாற்றம் உள்ளிட்ட உள்கட்டமைப்புக்கான நடவடிக்கை தடை செய்யப்படுகிறது.  தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) உள்ள அலுவலகங்கள் 50 சதவீத திறனில் செயல்பட வேண்டும் என்றும், மீதமுள்ள பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மத்திய அரசு ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.13,000 தள்ளுபடி!
புடவையில் சொக்க வைக்கும் நடிகை அஞ்சலி