ஹிந்தியில் காஜல் அகர்வால் அறிமுகமான படம் ’சிங்கம்’ இல்லையாம்… வைரலாகும் தகவல் - Tamil News | Did you know Actress Kajal Aggarwals Bollywood debut movie | TV9 Tamil

ஹிந்தியில் காஜல் அகர்வால் அறிமுகமான படம் ’சிங்கம்’ இல்லையாம்… வைரலாகும் தகவல்

Published: 

03 Dec 2024 17:48 PM

Actress Kajal Aggarwal: தமிழில் முன்னணி நடிகர்களான கார்த்தி, சூர்யா, விஜய், அஜித், ஜெயம் ரவி போன்ற பல நடிகர்களுடன் நடித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் காஜல் அகர்வால்.

1 / 5தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துவரும் நடிகை காஜல் அகர்வால் ஜூன் மாதம் 19-ம் தேதி பிறந்த இவருக்கு தற்போது 39 வயதாகிறது. தமிழில் நடிகர் பரத் உடன் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ’பழனி’ படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இந்தப் படத்தை இயக்குநர் பேரரசு இயக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துவரும் நடிகை காஜல் அகர்வால் ஜூன் மாதம் 19-ம் தேதி பிறந்த இவருக்கு தற்போது 39 வயதாகிறது. தமிழில் நடிகர் பரத் உடன் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ’பழனி’ படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இந்தப் படத்தை இயக்குநர் பேரரசு இயக்கியுள்ளார்.

2 / 5

அதனை தொடர்ந்து பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு மொழியில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட மாவீரன் படம் காஜல் அகர்வாலை தமிழ் மக்கள் மத்தியில் நன்கு கொண்டு சேர்த்தது.

3 / 5

அதனைத் தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களான கார்த்தி, சூர்யா, விஜய், அஜித், ஜெயம் ரவி போன்ற பல நடிகர்களுடன் நடித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் காஜல் அகர்வால். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

4 / 5

கடந்த 2020-ம் ஆண்டு தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை காஜல் அகர்வால். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. நடிகை காஜல் அகர்வால் பாலிவுட்டில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான சிங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தியில் அறிமுகம் ஆனார்.

5 / 5

இந்தப் படம் தமிழில் ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படம் தான் காஜல் அகர்வால் இந்தியில் அறிமுகம் ஆனார் என்று கூறப்பட்டுவரும் நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'கியூன் ஹோ கயா நா' என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?