Dipa Karmakar Retirement: இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் திடீர் ஓய்வு..! - Tamil News | Dipa Karmakar Announced Retirement; Indian gymnast Dipa Karmakar announces retirement today | TV9 Tamil

Dipa Karmakar Retirement: இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் திடீர் ஓய்வு..!

Published: 

07 Oct 2024 20:45 PM

Dipa Karmakar: 31 வயதான தீபா கர்மாகர் சமூக ஊடகங்களில் ஒரு இடுகையைப் பகிர்ந்து இன்று ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், 'மிகவும் யோசித்த பிறகு, ஜிம்னாஸ்டிக்ஸில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு எனக்கு எளிதானது அல்ல, ஆனால் இது சரியான நேரம். ஜிம்னாஸ்டிக்ஸ் என் வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாகும், ஒவ்வொரு கணத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.

1 / 6இந்தியாவின்

இந்தியாவின் நட்சத்திர ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான தீபா கர்மாகர் தனது ஓய்வை அறிவித்தார். இந்த தகவலை அவர் சமூக வலைதளங்கள் மூலம் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இந்தாண்டு, ஆசிய சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்ட் என்ற பெருமையை தீபா கர்மாகர் படைத்தார்.

2 / 6

கடந்த 2026ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தை பிடித்த தீபா கர்மாகர், 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம், காமன்வெல்த் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

3 / 6

31 வயதான தீபா கர்மாகர் சமூக ஊடகங்களில் ஒரு இடுகையைப் பகிர்ந்து இன்று ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், 'மிகவும் யோசித்த பிறகு, ஜிம்னாஸ்டிக்ஸில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு எனக்கு எளிதானது அல்ல, ஆனால் இது சரியான நேரம். ஜிம்னாஸ்டிக்ஸ் என் வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாகும், ஒவ்வொரு கணத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.

4 / 6

திரிபுராவை சேர்ந்த தீபா கர்மாகர் இந்தியாவில் சிறந்த ஜிம்னாஸ்ட்களில் ஒருவர். ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு துருக்கியின் மெர்சினில் நடந்த FIG ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் வேர்ல்ட் சேலஞ்ச் கோப்பையின் வால்ட் போட்டியில் நாட்டிற்காக தங்கப் பதக்கத்தை வென்றார்.

5 / 6

ஜிம்னாஸ்டிக்ஸ் வேர்ல்ட் சேலஞ்ச் கோப்பையில் தங்க பதக்கம் வென்றதன்மூலம், இந்த சாதனையை படைத்த முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். மேலும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 2 பதக்கங்களை வென்றுள்ளார்.

6 / 6

கடந்த 2023ம் ஆண்டு தீபா கர்மாகர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்று, ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டார். இதன் பின், தன் மீதான குற்றச்சாட்டை தவறில்லை என நிரூபித்து ஜூலை 10, 2023 ம் தேதி மீண்டும் களத்திற்கு திரும்பினார்.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?