தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது கண்ணில் தீப்பொறி பட்டால் என்ன செய்ய வேண்டும்? - Tamil News | diwali 2024 eye safety tips how to protect eyes during deepavali details in tamil | TV9 Tamil

தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது கண்ணில் தீப்பொறி பட்டால் என்ன செய்ய வேண்டும்?

Published: 

22 Oct 2024 13:46 PM

Deepavali Eye Care: தீபாவளி பண்டிகை என்றால் தீபம் ஏற்றுதல், பட்டாசு இவை இல்லாமல் தீபாவளிப் பண்டிகை முழுமையடையாது. இருப்பினும், பட்டாசு வெடிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது வேடிக்கையாக இருக்கும். ஆனால் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் எந்த சிறு தவறும் விபத்துக்கு வழிவகுக்கும்.

1 / 5பட்டாசு

பட்டாசு வெடிக்கும்போது கண்களில் தீப்பொறி விழுந்தால், தவறுதலாகக் கூட கண்களைத் தேய்க்காதீர்கள். இந்த சிறிய தவறு, கண்பார்வையை கூட இழக்க வழிவகுக்கும். தீபாவளியன்று நீங்கள் பட்டாசு வெடிக்கிறீர்கள் என்றால், வெடித்த பிறகு உங்கள் கைகளையும் குழந்தைகளின் கைகளையும் கழுவ மறக்காதீர்கள். ஏனெனில் பட்டாசு தயாரிப்பதில் பல வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

2 / 5

பட்டாசு வெடித்த கைகளால் கண்களைத் தொடாதீர்கள். அப்படித் தொடுவதால் எரிச்சல், அரிப்பு, சிவத்தல் போன்றவை ஏற்படும். எனவே பட்டாசு வெடிக்கும் போது கவனமில்லாமல் இருந்தால் பிரச்சனை மோசமாகும்.

3 / 5

பட்டாசு வெடிக்கும்போது கண்ணில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால்.. வீட்டு வைத்தியத்தை தவிர்க்கவும். உடனடியாக மருத்துவ நிபுணரை அணுகவும். மேலும் சொந்தமாக கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம். தவறுதலாக கூட வீட்டு வைத்தியத்தை முயற்சிக்காதீர்கள்.

4 / 5

கண்கள் மிகவும் உணர்திறன் கொண்டவை. அதனால் பார்வை இழக்கும் வாய்ப்பு அதிகம். கண்ணில் தீப்பொறி விழுந்தால், முதலில் குளிர்ந்த நீரில் கண்களைக் கழுவவும். அதன் பிறகு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது கட்டாயம் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்...

5 / 5

பட்டாசு வெடிக்கும் போது கண் கண்ணாடி அணிய வேண்டும். இவ்வாறு செய்வதால் பட்டாசுகளின் புகை மற்றும் தீப்பொறிகளில் இருந்து கண்கள் பாதுகாக்கப்படும். மேலும் பட்டாசு வெடிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கைகளில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க விடாதீர்கள்.

மனிதர்களை தாக்கக்கூடிய பறவைகள் என்னென்ன தெரியுமா?
வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?