Diwali 2024: வீட்டில் பல்லி, எலி.. தீபாவளி தினத்தின் ஆன்மீக நம்பிக்கை! - Tamil News | Diwali 2024 if you see these animals in deepavali night your luck will be changed details in tamil | TV9 Tamil

Diwali 2024: வீட்டில் பல்லி, எலி.. தீபாவளி தினத்தின் ஆன்மீக நம்பிக்கை!

Published: 

25 Oct 2024 09:15 AM

Deepavali : தீபாவளி அன்று லட்சுமி தேவியை அனைவரும் வழிபடுவது வழக்கம். லட்சுமிதேவியை வீட்டுக்கு அழைக்க விசேஷ பூஜைகள் நடைபெறும். நாம் செய்யும் பூஜையினால் லட்சுமிதேவி நம் இல்லங்களுக்கு வருகிறாரா என்பது நமக்கு தெரியாது. ஆனால் சில அறிகுறிகளின் மூலம் லட்சுமி தேவியின் வருகையில் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

1 / 62024

2024 ஆம் ஆண்டில், தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 அன்று வருகிறது. இந்த நாளில் தோன்றும் பல விஷயங்கள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. சில உயிரினங்களைப் பார்ப்பது எதிர்காலத்தில் உங்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாது என்று நம்பப்படுகிறது.

2 / 6

தீபாவளி அன்று இரவில் வீட்டிலோ அல்லது வீட்டைச் சுற்றியோ சில உயிரினங்கள் தோன்றினால், அது லட்சுமியின் வருகையின் அறிகுறியாக கருதப்படுகிறது. லட்சுமி தேவி செல்வ செழிப்புடன் இருப்பார், நிதிப் பிரச்சனைகளில் இருந்து விடுவித்து உங்களை மகிழ்ச்சியடையச் செய்வார் என்பது‌ நம்பிக்கை.

3 / 6

தீபாவளி இரவில் ஆந்தையைக் கண்டால், அது மிகவும் மங்களகரமானது என்று நம்பப்படுகிறது. ஆந்தை லட்சுமி தேவியின் வாகனமாகவும் கருதப்படுகிறது. தீபாவளியன்று இரவில் ஆந்தையைக் கண்டால், லட்சுமி தேவி உங்கள் வீட்டிற்கு வருகிறார் என்று அர்த்தம்.

4 / 6

தீபாவளியன்று வீட்டில் பல்லி இருந்தால் அது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. அதனால் பல்லியை விரட்டாதீர்கள். தீபாவளிப் பண்டிகையில் பல்லியைப் பார்ப்பது எதிர்காலத்தில் உங்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாது என்பதைக் குறிக்கிறது.

5 / 6

சாஸ்திரங்களின்படி, தீபாவளியன்று உங்கள் வீட்டில் அல்லது அதைச் சுற்றி எலியைக் கண்டால் அது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி மற்றும் உங்கள் பணம் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை.

6 / 6

தவிர, தீபாவளியன்று காவி நிற மாடு அல்லது பூனையைப் பார்ப்பது நன்மை பயக்கும். இது லட்சுமி தேவியின் வருகைக்கான அறிகுறியாக கருதப்படுகிறது. ((Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை))

வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா?
தண்ணீர் குடிக்க வேண்டிய 5 முக்கியமான தருணங்கள்..!
தினமும் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 13!