இந்த லிஸ்டில் மூன்றாவதாக இருப்பது இயக்குநர் நித்தீலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா. தமிழ் பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ், அனுராக், சச்சனா, சுப்பிரமணியம் மற்றும் அபிராமி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஜூன் 14ல் வெளியாகியது. விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் அப்பா, மகள் கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. நாளை விஜய் டி.வியில். மாலை 5 :30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.